12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,16,473 பேர் தேர்ச்சி; பள்ளிக்கு வராத 1656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கீடு!

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,16,473 பேர் தேர்ச்சி; பள்ளிக்கு வராத 1656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கீடு!

தமிழ்நாட்டில் +2 பொதுத் தேர்வில் இந்தாண்டு 600/600 மதிப்பெண் எடுத்தவர்கள் யாரும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,16,473 பேர் தேர்ச்சி; பள்ளிக்கு வராத 1656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கீடு!

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.+2 தேர்வு முடிவுகள் மாணவர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “பிளஸ் 2 மாணவர்கள் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர். 22ஆம் தேதி முதல் பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு +2 பொதுத் தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்தவர்கள் யாரும் இல்லை. மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் வருகிற 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.அவர்களுக்கு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வுகள் நடத்தப்படும். +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 3,80,500, +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியர் எண்ணிக்கை 4,35,973 ஆக உள்ளது. பொதுப்பாடப்பிரிவு 7,64,593 பேர் ,தொழிற்பாடப்பிரிவு 51,880 பேர் என 100% தேர்ச்சி கிட்டியுள்ளது. +2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஜூலை 22 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்”என்றார்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,16,473 பேர் தேர்ச்சி; பள்ளிக்கு வராத 1656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கீடு!

தொடர்ந்து பேசிய அவர், ஒரே மதிப்பெண் பலருக்கும் கிடைக்கும் என்பதால் போட்டியை தவிர்க்க முதல் முறையாக தசம மதிப்பில் +2 மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா நிலைமையைப் பொறுத்து சுமார் 40 ஆயிரம் பேர் மற்றும் மறுதேர்வு கோருவோருக்கு தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்படும். அறிவியல் பிரிவில் 551 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 679. 551 முதல் 600க்குள் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 679, 501 முதல் 550 வரை மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,67,133, 451 முதல் 500 வரை மதிப்பெண் பெற்றவர்கள் 2,22,522 ஆக உள்ளது.அதேபோல் 401 முதல் 450 வரை 2,08,051 பேரும் 351முதல் 400 வரை மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை 1,19,579 ஆகவும் உள்ளது” என்றார்.