’நான் செஞ்சது தப்புதான். ஆனா, ஸாரி கேட்க மாட்டேன்’ அனிதாவின் புது விளக்கம்! #பிக்பாஸ் 80-ம் நாள்

 

’நான் செஞ்சது தப்புதான். ஆனா, ஸாரி கேட்க மாட்டேன்’ அனிதாவின் புது விளக்கம்! #பிக்பாஸ் 80-ம் நாள்

வழக்கம்போல அனிதாவின் ஆட்டியூட் நேற்றும் தொடர்ந்தது. ஆனால், சுவாரஸ்யம் குறைந்த பந்து பிடிக்கும் போட்டி ஒரு வழியாக நேற்றைய எப்பிசோட்டோடு முடிவடைந்தது. இதிலும் 1,2,3 நிற்பதில் சண்டைகள், சச்சரவுகள் என நீண்டது. அவை குறித்து விரிவாகக் கட்டுரையில் பார்ப்போம்.

முதன்நாள் தொடர்ச்சி

விடியற்காலை 5 மணிக்கு பஸ்ஸர் அடித்தார் பிக்கி. ஆங்காங்கே தூங்கி வழிந்துகொண்டிருந்தவர்கள் ஓடி வந்து பந்து விழும் இடத்திற்கு வந்தார்கள். பாலா டீம் பிடிக்க ட்ரைப் பண்ணும்போது ஷிவானி அதைத் தவற விட்டார். உடனே ஒரு வார்த்தையை விட்டார் பாலா.

’நான் செஞ்சது தப்புதான். ஆனா, ஸாரி கேட்க மாட்டேன்’ அனிதாவின் புது விளக்கம்! #பிக்பாஸ் 80-ம் நாள்

ஷிவானி என்பதால் பாலா ஓவராக பேசுவதும், பாலா சாதாரணமாகப் பேசினாலும் சட்டென்று ஷிவானி கோபப்படுவதும் இப்போது அடிக்கடி நடக்கிறது. அதுவும் பாலா ‘ஸ்போர்ட்ஸ் ஸ்பாயில்’ என்று சொன்னதும் கடுப்பின் உச்சத்துக்கே சென்றார்.

பிக்பாஸ் 80-ம் நாள்

பந்து விளையாட்டு என்பதால் ‘ஓடி ஓடி விளையாடு’ பாட்டை ஒலிக்க விட்டார் பிக்கி. டான்ஸ் எனும் பெயரில் ஆடினார்கள்.

காலையிலேயே பஞ்சாயத்தை ஒன்றை ஆரம்பித்தார் ஆரி. பயித்தம் பருப்பு என கடலை பருப்பை ஊற வைச்சி, அதை பிரிட்ஜில் வைக்காமல், வீணடித்து கீழேயும் கொட்டாமல் வைத்திருந்தார்கள். அதை கேப்டன் எனும் முறையில் பாலாவிடம் சொன்னார் ஆரி. அதை அனிதாவிடம் விசாரித்தார். ‘2 ரூபா தாண்டா கேட்டேன். சட்டுனு கையை நீட்டி அடிச்சிட்டான்’னு வடிவேல் சொல்ற மாதிரி ‘பருப்பு என்னாச்சு’னுதான் கேட்டேன், சட்டுன்னு கோபமாயிட்டாங்கனு பாலா தலையில கையை வெச்சிட்டு உட்கார்ந்திட்டார்.

’நான் செஞ்சது தப்புதான். ஆனா, ஸாரி கேட்க மாட்டேன்’ அனிதாவின் புது விளக்கம்! #பிக்பாஸ் 80-ம் நாள்

’ஆரி கூட சாப்பாட்டை மிச்சம் வைச்சி வேஸ்ட் பண்ணிட்டார்’னு ரம்யா புகார் பண்ண, ‘அதையும் கேட்டேன். ஸாரி சொல்லிட்டார்’னு சொன்னார் பாலா. உடனே பஞ்சாயத்து மன்றத்தைக் கூட்ட சோபா ஏரியாவில் அசெம்பளானார். பாலா திரும்ப திரும்ப சொன்னாலும் அனிதா அதைக் கேட்பது போல தெரியவில்லை. ‘நான் செஞ்சது தப்புதான். ஆனா, நீங்க ஹார்ஷா கேட்டதால ஸாரி கேட்க மாட்டேன்’ என்று புது விளக்கம் சொன்னார் அனிதா. ஆனால், உண்மையில் சாதாரணமாகவே விசாரித்தார் பாலா. பாலா, காலில் விழுந்து அனிதாவிடம் விசாரித்தாலும் பாலா மஞ்சள் கலரில் சட்டை போட்டிருக்கார் அதனால் ஸாரி கேட்க மாட்டேன் என்று அனிதா சொன்னாலும் சொல்வார்.

அனிதாவைப் பற்றி ஆரி கணித்தது சரிதான். தன் தவற்றை ஒருவர் சுட்டிக்காட்டினாலும் மறந்தும்கூட ஸாரி கேட்கக்கூடாது என்ற உறுதியில் இருக்கும் ஆட்டியூட் சூப்பர். அதற்கும் சேர்த்து ரம்யா, கிட்சன் டீம் சார்பாக மன்னிப்பு கேட்க பாலா அந்த விஷயத்தை விட்டார்.

பந்து பிடிப்பதில் டீமாக கிடைத்த மதிப்பெண்களைத் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ளச் செய்தார். அப்படியே சரிசமமாகப் பிரித்துக்கொண்டனர். ஆள் குறைவு பிடிக்கப்பட்ட பந்துகள் அதிகம் என்பதால் சோம்ஸ் டீம்க்கு அதிக பாயிண்ட்டுகள் கிடைத்தன.

’நான் செஞ்சது தப்புதான். ஆனா, ஸாரி கேட்க மாட்டேன்’ அனிதாவின் புது விளக்கம்! #பிக்பாஸ் 80-ம் நாள்

பிறகு தனித்தனியாகப் பிடிக்கும் போட்டியை அறிவித்தார் பிக்கி. இது சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால், அடுத்தடுத்து பெயர்களைச் சொன்னதால் மற்றவர் பந்தை பிடிக்கும்படி சிலருக்கு ஆகி விட்டது. அதுவும் சோம்ஸ் பெயரை மூன்று முறை அழைத்தார். அவர் கையில் மூன்று பந்துகள் இருந்தன. ஆனால், ஒரு முறை தவற விட்டுவிட்டேன் என்றும் சொன்னார். சோம் கணக்கு எப்பவுமே வித்தியாசமானதுதான். கேட்டால் உடனே டென்ஷனாகி விடுவார்.

ஒரு வழியாக பந்து பிடிக்கும் விளையாட்டு முடிவுக்கு வந்தது. இதில் 1 முதல் 9 வரை ஆள் வரிசை பிடித்து நிற்கச் சொன்னார் பிக்கி. முதல் இடத்துக்கு ரம்யா, ஆரி, ரியோ போட்டிப்போட்டனர். அதிக ஓட்டுகள் ரியோவுக்கு கிடைக்க முதல் இடம் பெற்றார். அதற்கு முன் ஒரு ரவுண்ட் சண்டை முற்றி ஓய்ந்தது.

ரம்யாவுக்கு இரண்டாம் இடம். மூன்றாம் இடம் சோம். நான்காம் இடம் பாலா. ஐந்தாம் இடம் ஆரி. ஆறாம் இடம் அனிதா. ஆஜித் ஏழாம் இடம். எட்டாம் இடம் ஷிவானிக்கு. கடைசி இடமான 9-ம் இடம் கேபிக்கு.

’நான் செஞ்சது தப்புதான். ஆனா, ஸாரி கேட்க மாட்டேன்’ அனிதாவின் புது விளக்கம்! #பிக்பாஸ் 80-ம் நாள்

சென்றமுறை இப்படி வரிசைப்படுத்தி நிற்க சொன்னபோது ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தன. அதை இம்முறை சரிப்படுத்திக்கொண்டு ஓட்டுகள் போடப்பட்டு சரியான இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதன்மூலம் சில சண்டைகள் வரும் என நினைத்த பிக்கியின் நினைப்பில் மண் விழுந்தது. அதனால், கோபத்துடன் பின்கதை சுருக்கம் சொல்லாமல் எண்ட் கார்டு போட்டார் பிக்பாஸ்.