“80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலை கொடுக்க முடியாது” – திமுகவின் கோரிக்கையை மறுத்த தேர்தல் ஆணையம்!

“80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலை கொடுக்க முடியாது” – திமுகவின் கோரிக்கையை மறுத்த தேர்தல் ஆணையம்!

சமீபத்தில் நடந்துமுடிந்த பிகார் சட்டப்பேரவை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த தேர்தல் ஆணையம் அனுமதியளித்தது. இதனால் வாக்கு எண்ணிக்கை முடிவில் மாற்றம் ஏற்பட்டதாக அப்போதே திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இச்சூழலில் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் இதே முறை பின்பற்றப்படும் என அறிவிப்பு வெளியாகியிருப்பது திமுக தரப்பினிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

“80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலை கொடுக்க முடியாது” – திமுகவின் கோரிக்கையை மறுத்த தேர்தல் ஆணையம்!

இதனால் தேர்தலில் முறைகேடு நடைபெறும் என்ற வாதத்தை முன்வைத்து இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் 80 வயதுக்குக்கு மேற்பட்டோரின் பட்டியலையும் கோரியிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தரப்பில் தாக்கல் செய்த மனுவில், “80 வயதைக் கடந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் குறித்த தரவுகள் தனியாக திரட்டப்படுகின்றன. எல்லோருக்கும் சம உரிமை, சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற அரசியலமைப்பு விதியின் கீழ் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

“80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலை கொடுக்க முடியாது” – திமுகவின் கோரிக்கையை மறுத்த தேர்தல் ஆணையம்!

இவர்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தபால் ஓட்டு போடுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். அதன் பேரில் படிவங்கள் வழங்கப்படும். தேவைப்பட்டால் தபால் ஓட்டுப் படிவங்களைச் சேகரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். அவர்களது பெயர் விவரப் பட்டியலை முன்கூட்டியே வெளியிடுவது அவர்களது தனிப்பட்ட உரிமைக்கு எதிரானது. எனவே அரசியல் கட்சிகளுக்கு இப்போது கொடுக்க முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது,