5 லட்சத்துக்கு மேல் கொரோனா பாதிப்புள்ள 8 நாடுகள் இவைதான்

 

5 லட்சத்துக்கு மேல் கொரோனா பாதிப்புள்ள 8 நாடுகள் இவைதான்

கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் படாதபாடு படுத்தி வருகிறது. சில நாடுகள் முன்னெச்சரிக்கையோடு நடந்துகொண்டு கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. ஆனால், பல நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 62 லட்சத்து  86 ஆயிரத்து 532 பேர்.

  

5 லட்சத்துக்கு மேல் கொரோனா பாதிப்புள்ள 8 நாடுகள் இவைதான்

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 85 லட்சத்து 30 ஆயிரத்து 939 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 69 ஆயிரத்து 204 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்த 8 நாடுகள் எவையென பார்ப்போம்.

5 லட்சத்துக்கு மேல் கொரோனா பாதிப்புள்ள 8 நாடுகள் இவைதான்

கொரோனா நோய்த் தொற்று அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகியவைதான் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இதில் அமெரிக்கா 63,10,783 நோய் பாதிப்பு உள்ளது. அதற்கு அடுத்து இருக்கும் பிரேசிலில் கொரோனா பாதிப்பு , 40 லட்சத்து ஆயிரத்து 422 பேர். இந்தியாவில் 39 லட்சத்து 60 ஆயிரத்து 048 பேர்.

நான்காவது இடத்தில் இருக்கும் நாடு ரஷ்யா. இந்நாட்டின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 14 ஆயிர்த்து 990. இதில் இறந்தோர் எண்ணிக்கை 17,528

ஐந்தாம் இடத்தில் இருப்பது பெரு நாடு. இங்கு மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 63 ஆயிரத்து 437. இதில் இறந்தோர் எண்ணிக்கை 29,259.

5 லட்சத்துக்கு மேல் கொரோனா பாதிப்புள்ள 8 நாடுகள் இவைதான்

ஆறாம் இடத்தில் இருக்கும் நாடு கொலம்பியா. இங்கு மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 33 ஆயிரத்து 339. இதில் இறந்தோர் எண்ணிக்கை 20,348.

ஏழாம் இடத்தில் இருக்கும் நாடு சவுத் ஆப்பிரிக்கா. இங்கு மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 30 ஆயிரத்து 595. இதில் இறந்தோர் எண்ணிக்கை 14,389.

எட்டாம் இடத்தில் இருக்கும் நாடு மெக்சிகோ. இங்கு மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 15 ஆயிரத்து 878. இதில் இறந்தோர் எண்ணிக்கை 66,391