சூடு பிடிக்குமு் முகுல் ராய் விவகாரம்.. மேற்கு வங்கத்தில் ராஜினாமா கடிதத்தை கொடுத்த 8 பா.ஜ.க.. எம்.எல்.ஏ.க்கள்

சூடு பிடிக்குமு் முகுல் ராய் விவகாரம்.. மேற்கு வங்கத்தில் ராஜினாமா கடிதத்தை கொடுத்த 8 பா.ஜ.க.. எம்.எல்.ஏ.க்கள்

மேற்கு வங்கத்தில் பொது கணக்கு கமிட்டியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு சட்டமன்ற குழுக்கள் மற்றும் மேற்கு வங்க சட்டமன்றத்தின் நிலைக்குழுக்களிலிருந்து தங்களது பதவிகளை 8 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.

திரிணாமுல் காங்கிரசில் இருந்த முகுல் ராய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.க.வுக்கு தாவினார். கடந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில் கடந்த மாதம் முகுல் ராய் பா.ஜ.க.விலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

சூடு பிடிக்குமு் முகுல் ராய் விவகாரம்.. மேற்கு வங்கத்தில் ராஜினாமா கடிதத்தை கொடுத்த 8 பா.ஜ.க.. எம்.எல்.ஏ.க்கள்
திரிணாமுல் காங்கிரஸ்

மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வந்த முகுல் ராய்க்கு, பொது கணக்கு கமிட்டி தலைவர் பதவியை மம்தா பானர்ஜி கொடுத்தார். இதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், மிஹிர் கோஸ்வாமி, மனோஜ் டிக்கா மற்றும் கிருஷ்ணா கல்யாணி உள்ளிட்ட 8 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், கட்சியின வழிகாட்டுதலின்படி, கடந்த 9ம் தேதி முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில், மேற்கு சட்டமன்ற குழுக்கள் மற்றும் மேற்கு வங்க சட்டமன்றத்தின் நிலைக்குழுக்களிலிருந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்த தகவலை பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

சூடு பிடிக்குமு் முகுல் ராய் விவகாரம்.. மேற்கு வங்கத்தில் ராஜினாமா கடிதத்தை கொடுத்த 8 பா.ஜ.க.. எம்.எல்.ஏ.க்கள்
சுவேந்து ஆதிகாரி

எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து ஆதிகாரி தலைமையில் எதிர்ககட்சி எம்.எல்.ஏ.க்கள் குழு, கவர்னர் ஜகதீப் தங்கரை சந்தித்து பொது கணக்கு கமிட்டி முறைகேடு தொடர்பாக பிரதிநிதித்துவத்தை சமர்பித்தது. இது குறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுவேந்து ஆதிகாரி கூறுகையில், பொது கணக்கு கமிட்டி பதவிக்கு மேற்கு சட்டப்பேரவையில் திரிணாமுல் காங்கிரஸ் அரசியல் செய்து வருவதையும், பா.ஜ.க.வுக்கு வாக்களித்த 2.28 கோடி தனிமைப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னரிடம் வந்துள்ளோம். மாநில மரபுகள் உடைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார்.