8 ஆம் தேதி அறிமுகமாகும் ரெட்மீ நோட் 9T -விலை எவ்வளவு தெரியுமா ?

 

8 ஆம் தேதி அறிமுகமாகும் ரெட்மீ நோட் 9T -விலை எவ்வளவு தெரியுமா ?

இந்தியாவில் மிகக் குறுகிய காலத்தில் சந்தையை பிடித்த நிறுவனம் ஜியோமி. அடக்கமாக விலையில், அதிக வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை அளித்ததால், இந்தியாவில் கிடு கிடு வளர்ச்சி கண்டது. சீனாவைச் சேர்ந்த இந்த நிறுவனம், உலகம் முழுவதும் தனது ரெட்மி மாடல்கள் மூலம் குறிப்பிடத்தக்க சந்தையை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், புதிதாக ரெட்மீ நோட் 9T மாடலை நாளை மறுநாள் , 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே தாய்லாந்து தொலைத் தொடர்பு அமைப்பு, மலேசியாவின் தகவல்தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனம் ஆகியவற்றின் இணையத்தளங்களில் ரெட்மீ நோட் 9T தொடர்பாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனடிப்படையில் ஜியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் சந்தையில் கசிந்துள்ளன.

8 ஆம் தேதி அறிமுகமாகும் ரெட்மீ நோட் 9T -விலை எவ்வளவு தெரியுமா ?

ரெட்மீ நோட் 9T மாடலின் பின்பக்க பேனல்கள் சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதற்கு அப்போதே மிகப்பெரிய வரவேற்பு எழுந்தது. ஏற்கனவே சீனாவில் நோட் 9 மாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக நோட் 9T மாடல் வெளியாக உள்ளது

ரெட்மீ நோட் 9T மாடல் 5ஜி சேவையை வழங்கும் வகையில் இருக்கும். இந்தியாவில் வரும் 8 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் அறிமுகமாக உள்ளது. நிறுவனத்தின் இணையதளம் வழியாகவும், யு டியூப் வழியாகவும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

4 ஜிபி ரேம் 64 ஜிபி நினைவக வசதியுடன் உள்ள நோட் 9T ஸ்மார்ட்போன் இந்தியாவில் 20 ஆயிரத்து 700 ரூபாய் வரை இருக்கும். 4 ஜிபி ரேம் 128 ஜிபி நினைவக வசதிகொண்ட போன் விலை 24 ஆயிரத்து 300 ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. இரண்டு வண்ணங்களில் குறிப்பாக நைட் ஃபால் பிளாக் மற்றும் டே பிரேக் பர்பிள் வண்ணங்களில் வெளியாக உள்ளது.

6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி ஸ்கிரீன் கொண்டிருக்கும். 48 மேகா பிக்ஸல் பின்புற கேமரா கொண்டிருக்கும். வைட் ஆங்கில் லென்ஸ், 2 மெகா பிக்ஸல் மேக்ரோ சென்சார் கொண்டிருக்கும். முன்பக்கத்தில் 13 மெகா பிக்ஸல் கேமரா வசதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வேகமாக சந்தை கொண்டுள்ள ஜியோமி ஸ்மார்ட்போன்களுக்கு, தற்போது மேலும் வலுசேர்க்கும் விதமாக ரெட்மீ நோட் 9T மாடல் இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடக்கமான விலையில் 5 ஜி வசதியை அளிக்கும் போன் என்கிறபோது, ரெட்மீ வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்திதான்.