8 கொலை 27 வழக்குகள் ரவுடிக்கு தீர்ப்பு எழுதிய போலீஸ்  தப்பிக்க முயன்றரை நிரந்தர தலைமறைவாக்கிய போலிஸ்

8 கொலை 27 வழக்குகள் ரவுடிக்கு தீர்ப்பு எழுதிய போலீஸ்  தப்பிக்க முயன்றரை நிரந்தர தலைமறைவாக்கிய போலிஸ்

விழுப்புரம் மாவட்டத்தில் கொலை உள்ளிட்ட வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்த ரவுடியை என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளியது போலீஸ்.

சென்னை அண்ணாநகர் மேற்கு கொரட்டூர் இடையிலான குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு திடீரென துப்பாக்கிச் சுடும் சப்தம் கேட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பின்னர் போலீசார் என்கவுண்ட்டர் நடத்திய சம்பவம் கேட்டவுடன் அந்த பகுதியே பரபரப்பானது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரவுடி தாதா மணிகண்டன் என்றழைக்கப்படும் மணி மீது 8 கொலை உள்பட 27 வழக்குகள் உள்ளது. அவ்வப்போது போலீசார் இவரை கைது செய்வதும், பின்னர் ஜாமின் பெற்று வந்து மறுபடியும் ஒரு கொலை அல்லது ஏதாவது குற்றச்சம்பவம் செய்வதும் மீண்டும் அவரை கைது செய்வதுமாக இருந்த போலீசார் சலித்து போயினர்.

manikandan

இந்நிலையில் கொலை வழக்கில் ஜாமின் பெற்ற மணிகண்டன் விசாரணைக்கு ஆஜராகாமல் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்துள்ளார். சென்னை கொரட்டூரில் பதுங்கியிருந்த மணிகண்டன் குடும்பத்துடன் வெளிநாடு செல்லவும் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. மணிகண்டன சென்னையில் பதுங்கி இருப்பதை அறிந்த, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை நேற்று சென்னை வந்தது. கொரட்டூரில் அவர் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்த போலீஸ் அதிரடியாக சென்று அவரை கைது செய்ய திட்டமிட்டிருந்தது.
பின்னர் வீட்டுக்குள் நுழைந்த ஆரோவில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிரபுவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் அங்கிருந்த அரிவாளை எடுத்து பிரபு மண்டையில் வெட்டினார். இதனால் பிரபுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

police

பின்னர் தனிப்படை காவல் ஆய்வாளர் பிரகாஷையும் அரிவாளால் லேசாக தாக்கினார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட பிரகாஷ் தற்காப்புக்காக மணிகண்டனை பார்த்து 2 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதையடுத்து மற்ற காவலர்கள் பிரபு, பிரகாஷை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ரவுடி மணிகண்டன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. குற்றவாளிகளுக்கு போலீசாரே இதுபோன்று தண்டனை வழங்கும்போதுதான் மக்களுக்கும் கொஞ்சமேனும் அவர்கள் மீது நம்பிக்கை வருகிறது. இது மனித உரிமை மீறல் செயல் என வழக்கம்போல் தெரிவித்தாலும், ரவுடி மணிகண்டனால் 8 பேர் கொல்லப்பட்டு அவர்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதையும் கருத்தில் கொள்ளவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.