7 பேரின் உயிரிழப்புக்கு காரணம் ஆக்சிஜன் பற்றாக்குறையா? அறிக்கை கேட்டு உத்தரவு

 

7 பேரின் உயிரிழப்புக்கு காரணம் ஆக்சிஜன் பற்றாக்குறையா? அறிக்கை கேட்டு உத்தரவு

ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நாலுபேரும், பொது வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரும் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் எழுப்பி இருக்கும் புகாரின் பேரில் மருத்து கல்வி இயக்குனநரகம் விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருக்கிறது.

7 பேரின் உயிரிழப்புக்கு காரணம் ஆக்சிஜன் பற்றாக்குறையா? அறிக்கை கேட்டு உத்தரவு

வேலூர் அடுக்கம்பாறையில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேரும், பொது வார்டில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு மூன்று பேரும் மொத்தம் ஏழு பேரும் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர். ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் போனதே இவர்களின் இறப்புக்கு காரணம் என்று உறவினர்கள் புகார் கூறினர்.

உயிரிழந்த 7 பேரில் 2 பேர் பெண்கள். ஆக்சிஜன் வினியோகம் தடைபட்டதால் 7 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர் என்றும், மருத்துவர்கள் ஆம்புலன்சில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச் சென்று சிகிச்சைக்கு கொடுத்தனர் என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.

ஆக்சிஜன் பற்றாக் குறையினால் மாடியில் இருந்த சில நோயாளிகள் வேலூர் பழைய அரசு மருத்துவமனைக்கும் வாலாஜா மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சம்பவத்திற்கு பின்னர், வாகனங்களில் கொண்டு வரப்பட்ட 42 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வார்டுகளில் கொடுக்கப்பட்டதாகவும், வளாகத்தில் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட பழுது நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து தமிழக மருத்துவக் கல்லூரி இயக்குனர் நாராயண பாபு அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

7 பேரின் உயிரிழப்புக்கு காரணம் ஆக்சிஜன் பற்றாக்குறையா? அறிக்கை கேட்டு உத்தரவு

வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரமும், மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மணிவண்ணன் ஆகியோருடன் ஆலோசனைக்கு பின்னர் நாராயணபாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 7 பேரும் வெவ்வேறு உடல்நலக் குறைவினால் வெவ்வேறு நேரங்களில் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

வேலூர் ஆட்சியர் சண்முகம் இது குறித்து பேசிய போது, உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்தும், உயிரிழப்புகள் குறித்தும் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஆனாலும் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் தான் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தது குறித்து மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு உத்தரவிட்டிருக்கிறார்.