“உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்” – ஜெ., உறுதி அளித்து 7 ஆண்டுகள் நிறைவு

“உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்” – ஜெ., உறுதி அளித்து 7 ஆண்டுகள் நிறைவு

“உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்” என்று பேரறிவாளன் விடுதலை குறித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியபோது, அவரின் கைகளை பிடித்து கண்ணீர்விட்டார் அற்புதம்மாள். அந்த புகைப்படம் வெளியாகியதும் உலகமெங்கிலும் வாழும் தமிழர்களிடையே பரபரப்பான பேச்சு எழுந்தது. ஆனால், ஜெயலலிதா உறுதி அளித்து இன்றோடு 7 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இன்னும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை செய்யப்பட வில்லை.

“உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்” – ஜெ., உறுதி அளித்து 7 ஆண்டுகள் நிறைவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்களின் விடுதலை இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

கடந்த 2014ல் பிப்ரவரி மாதத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ‘’திருவாளர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், நளினி உள்ளிட்ட7 பேரும் விடுதலை செய்யப்படுவதாக எனது தலைமையிலான தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. ஆனாலும், புலனாய்வு துறையில் வழக்கு விசாரணை இருந்ததால் இந்த முடிவு குறித்து உடனடியாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்படுகிறது. மூன்று நாட்களில் மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை என்றால் மாநிலத்தில் இருக்கும் குற்றவியல் சட்ட அதிகாரத்தின் படி 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள்’’ என்று அறிவித்து அதிரடி காட்டினார்.

“உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்” – ஜெ., உறுதி அளித்து 7 ஆண்டுகள் நிறைவு

ஜெயலலிதாவுக்கு பின்னர் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இரண்டு ஆண்டுகள் கடந்தும் ஆளுநர் காட்டிய போக்கினால் இப்போதும் விடுதலை கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இந்நிலையில், ‘’நீதியை கொன்று ஒரு நிரபராதியை உயிரோடு புதைக்கும் காலத்தில் கழியும் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமே’’ என்று வேதனை தெரிவித்திருக்கிறார் அற்புதம்மாள்.

“உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்” – ஜெ., உறுதி அளித்து 7 ஆண்டுகள் நிறைவு

“உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்” என எனது கைகளை பற்றி உறுதியளித்து இன்றுடன் 7 ஆண்டுகள் முடிந்தது என்று சொல்லும்போதும், இன்னும் எத்தனை யுகங்கள் போராடுவது – இந்த சட்டத்துடனும், அரசியலுடனும்? என்று சொல்லும் வார்த்தையிலும் இருக்கும் வலியை உணர முடிகிறது.