720 மணி நேரத்தில் 16.46 லட்சம் வாகனங்கள் விற்பனை!

 

720 மணி நேரத்தில் 16.46 லட்சம் வாகனங்கள் விற்பனை!

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் மொத்தம் 16.46 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. இருப்பினும் இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 5.4 சதவீதம் குறைவாகும்.

இந்த ஆண்டு வாகன துறைக்கு இருண்ட ஆண்டு போல் தெரிகிறது. கடந்த ஜனவரி முதல் வாகன விற்பனை தொடர் சரிவை கண்டு வந்தது. இந்நிலையில், கடந்த மாதத்திலும் வாகன விற்பனை படுத்து விட்டது. மொத்த வாகனங்கள் விற்பனையில் பெரும் பங்களிப்பை இரு சக்கரவாகனங்கள் கொண்டுள்ளன. கடந்த மாதத்தில் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 5 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

எப்.ஏ.டி.ஏ.

வாகன முகவர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு  (எப்.ஏ.டி.ஏ.) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கடந்த ஜூன் மாத வாகன விற்பனை நிலவரம்

இரு சக்கர வாகனங்கள்    13,24,822
3 சக்கர வாகனங்கள்              48,447
வர்த்தக வாகனங்கள்            48,752
பயணிகள் கார்                     2,24,755
                                                 ———-
மொத்தம்                            16,46,776

வர்த்தக வாகனங்கள்

2018 ஜூன் மாதத்தில் மொத்தம் 17.40 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. ஆக கடந்த மாதத்தில் வாகன விற்பனை 5.4 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், வரும் மாதங்களிலும் வாகன விற்பனை மந்தமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்குகிறது. மேலும், 2025ம் ஆண்டுக்குள் 150 சிசி திறனுக்கு குறைவான இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு அனைத்தும் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.