ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

 

ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பதால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று கவலைப்படுகிறீர்களா? ஆனால் இந்த ஒரு மாத கால விரதம் சில ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!

ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

பேரீச்சை:

ஆன்மீக காரணங்களுக்காக ரம்ஜான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் இப்தார் தொடக்கத்தில் இஸ்லாமிய மக்கள் மூன்று பேரீச்சை பழங்களை சாப்பிடுகின்றனர். நோன்பின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று சரியான அளவு ஆற்றலைப் பெறுவதாகும். சராசரியான அளவில் தோராயமாக 31 கிராம் (1 அவுன்ஸ்) பேரீச்சையில் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால், நாள் முழுவதுக்கும் உற்சாகத்தை வழங்கும் உணவுகளில் ஒன்றாகும். பேரீச்சை பழங்களில் நார்ச்சத்துக்கள் உள்ளன. அதனால் ரம்ஜான் நோன்பு காலம் முழுவதும் இது செரிமானத்திற்கு உதவும் மற்றும் அதை மேம்படுத்தும்.

ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

மூளைத் திறன்:

நோன்பு இருப்பதால் மன நலம் மற்றும் ஆன்மீக கவனம் ஆகியவற்றில் நேர்மறையான விளைவுகள் ஏற்படும். அந்த வகையில் ரம்ஜான் நோன்பு இருக்கும்போது மூளைத் திறன் அதிகரிக்கும். அமெரிக்காவின் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி ரம்ஜான் நோன்பின்போது மனக் கவனம் அதிகரிப்பதால், மூளையில் நியூரோட்ரோபிக் காரணியின் அளவு அதிகரிக்கிறது. இதனால் அதிக மூளை செல்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் காரணமாக மூளையின் செயல்பாடு மேம்படுகிறது. அதேபோல், அட்ரீனல் சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் கார்டிசோல் என்ற ஹார்மோனின் அளவு குறைவதால் ரம்ஜான் காலத்திலும் அதற்குப் பின்னரும் மன அழுத்தம் வெகுவாக குறைகிறது.

ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

கெட்ட பழக்கங்கள்:

ரம்ஜான் நோன்பின்போது பகலில் உண்ணாவிரதம் இருப்பதால், கெட்ட பழக்கங்களை கைவிடுவதற்கு ரம்ஜான் காலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில் புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல், புகையிலை பொருட்களை உட்கொள்ளுதல் போன்ற தீய பழக்கங்களை கைவிட முயற்சிக்கலாம். அவற்றிலிருந்து விலகும்போது, உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பதற்கான சிறந்த நேரமாக இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை ரம்ஜானை பரிந்துரை செய்துள்ளது.

ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

குறைந்த கொழுப்பு:

ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்கும்போது கிடைக்கும் நன்மைகளில் ஒன்று எடை இழப்பு. இதனால் உடலில் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழ்கின்றன. ரம்ஜான் காலத்தில் நோன்பு கடைப்பிடிக்கும் மக்களின் இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இருதயநோய் நிபுணர்களின் குழு கண்டறிந்துள்ளது.

குறைவான கொழுப்பு காரணமாக இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. அதனால் இதய நோய், மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற அபாயங்கள் வெகுவாக குறைகிறது. அத்துடன் ரம்ஜான் காலத்திற்கு பிறகும் ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றினால், கொழுப்பின் அளவை தொடர்ந்து அளவாக பராமரிக்க முடியும்.

ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

பசி குறைதல்:

தினமும் சாப்பிடும் உணவின் அளவை திடீரென மொத்தமாக குறைத்து எடையை இழந்தால், அதற்கு பிறகு சகஜமான அளவில் உணவை உட்கொள்ளத் தொடங்கும்போது இழந்த எடையானது முன்பை விட வேகமாகவும், அதிக அளவிலும் கூட்டப்படும். ஆனால் ரம்ஜான் நோன்பு இருக்கும்போது அவ்வாறு நடப்பதில்லை. நோன்பு இருக்கும் காலம் முழுவதும் உணவு குறைப்பது சரியான அளவில் நடைபெறுவதால் தொப்பை படிப்படியாக சுருங்குகிறது.

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பெற விரும்புபவர்கள் ரம்ஜான் காலத்தில் நோன்பு இருப்பது ஒரு சிறந்த தேர்வாக அமையும். ரம்ஜான் நோன்பு காலம் முடிந்ததும், முன்பு இருந்ததை விட பசி குறைவாக இருக்கும். அதனால் நாம் அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

நச்சுத்தன்மை:

ரம்ஜான் நோன்பு காலத்தில் நாள் முழுவதும் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ கூடாது. அதனால் உடல் செரிமான அமைப்பு மேம்படுகிறது. உண்ணாவிரதம் காரணமாக உடலுக்கு தேவையான ஆற்றல், அதீத கொழுப்பு இருப்புக்களில் இருந்து பெறப்படுகிறது. அதனால் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களும் எரிக்கப்படுகிறது. இதனால் உடல் சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஒரு ஆரோக்கியமான செரிமான அமைப்பை உருவாக்கி செல்லும்.

ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

ஊட்டச்சத்துக்கள்:

ரம்ஜான் மாதத்தில் நாள் முழுவதும் சாப்பிடாததன் மூலம் வளர்சிதை மாற்றம் அருமையாக செயல்பட தொடங்கும். அதனால் உணவில் இருந்து உறிஞ்சும் ஊட்டச்சத்துக்களின் அளவு மேம்படுகிறது. ஏனெனில், ரம்ஜான் நோன்பு காலத்தில் அடிபொனெக்டின் என்ற ஹார்மோன் அதிகரிப்பதே இதற்குக் காரணம். ஆகவே உடலின் ஆரோக்கிய நன்மைகளுக்கு வழிவகுக்கும்.