உத்தரகாண்டில் திடீர் நிலச்சரிவு: 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

 

உத்தரகாண்டில் திடீர் நிலச்சரிவு: 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

உத்தரகண்ட் மாநிலம் பித்தோரகார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழைநீர் பெருக்கெடுத்து ஓடி பல இடங்களில் நிலச்சரிவு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் பித்தோரகார் மாவட்டத்தில் ஜும்மா கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்ததாக முதல்வர் புஷ்கர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்டில் திடீர் நிலச்சரிவு: 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாகவும் 5 பேர் மண்ணுக்குள் புதைந்ததாகவும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மாநில பேரிடர் மீட்பு படை துரிதமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.