நகைக்கடை கதவை உடைத்து, 7 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை!

 

நகைக்கடை கதவை உடைத்து, 7 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை!

சேலம்

தலைவாசல் அருகே நகைக் கடையின் கதவை உடைத்து 7 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த மும்முடி பகுதியில் முத்துராஜ் என்பவருக்கு சொந்தமான நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். நேற்று காலையில் நகைக் கடையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட, அந்த பகுதிமக்கள், முத்துராஜுக்கு தகவல் அளித்தனர்.

நகைக்கடை கதவை உடைத்து, 7 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை!

முத்துராஜ் உடனடியாக கடைக்கு சென்று பார்த்தபோது, இரும்பு ஷட்டரை உடைத்து கடையில் இருந்த 7 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 5 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும், கடையில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் கணினியையும் அவர்கள் தூக்கிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலின் பேரில், ஆத்தூர் டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன் தலைமையில் தலைவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதனிடையே, கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து, மாவட்ட எஸ்.பி., தீபா கனிகர் உத்தரவிட்டார்.