மத்திய அரசின் வருவாய் குறைந்தது – நிதிப்பற்றாக்குறை 7 சதவீதமாக இருக்கும் என கணிப்பு !

 

மத்திய அரசின் வருவாய் குறைந்தது – நிதிப்பற்றாக்குறை 7 சதவீதமாக இருக்கும் என கணிப்பு !

இந்தியாவின் நடப்பாண்டு நிதி பற்றாக்குறை 7 சதவீதம் வரை இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக, உலகம் முழுவதும் தொழில்துறை நடவடிக்கைகள் முடங்கி உள்ளன. இந்தியாவிலும் மோட்டார் வாகன உற்பத்தி, ரியல் எஸ்டேட், உருக்கு உள்ளிட்ட முக்கிய துறைகளின் வளர்ச்சி கடும் வீழ்ச்சி அடைந்தது. மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வருவாய் உள்ளிட்டவற்றில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் அன்றாட பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்க மத்திய அரசு பொருளாதார மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இதனால் மத்திய அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் இறுதியில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 7 சதவீதமாக இருக்கும் என கணிப்புகள் வெளியாகின.

மத்திய அரசின் வருவாய் குறைந்தது – நிதிப்பற்றாக்குறை 7 சதவீதமாக இருக்கும் என கணிப்பு !

கடந்த பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசின் கணிப்புகள்படி, இந்த நிதியாண்டின் நிதிப்பாற்றாக்குறை 3.5 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இலக்கு வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் இலக்கு, கொரோனா ஊரடங்கு காரணமாக கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுள்ளது. ஏற்கெனவே மத்திய அரசு பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க 7.8 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு 12 லட்சம் கோடி கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு துறைகளும் கடும் இழப்பை கண்டன. தொழில்கள் முடங்கியதால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்தது. இதனால் ஜிஎஸ்டி வரி வசூலும் குறைந்தது. கடந்த ஆண்டில், மார்ச் மாதத்துக்கு பின்னர் டிசம்பர் மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்கிற அளவை ஜிஎஸ்டி வசூல் கடந்துள்ளது. 7 சதவீத நிதிப் பற்றாக்குறை என்பது வளரும் பொருளாதாரத்துக்கு மிக அதிகமாகும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசின் வருவாய் குறைந்தது – நிதிப்பற்றாக்குறை 7 சதவீதமாக இருக்கும் என கணிப்பு !

கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதிப்பற்றாக்குறை குறித்து அச்சப்படத் தேவையில்லை என நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்த நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க அரசி தீவிரமாக பொதுத்துறை பங்குகளை விற்கும் நடவடிக்கைகளை எடுக்கும் என கூறப்படுகிறது.