காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் கோர வெடி விபத்து: 7 பேர் பரிதாப பலி!

 

காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் கோர வெடி விபத்து: 7 பேர் பரிதாப பலி!

காட்டுமன்னார்கோவில் அருகே செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடி கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நாட்டு வெடி தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த ஆலையில் இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. அதில் பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறியதால், கட்டடம் இடிந்து தரைமட்டமானது.

காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் கோர வெடி விபத்து: 7 பேர் பரிதாப பலி!

இந்த கோர விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் காந்திமதி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 10 பேரை மீட்ட தீயணைப்பு துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருகுமாறன், வெடி விபத்து குறித்த காரணத்தை கண்டுபிடிக்குமாறு போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.