அந்த மாநிலங்களில் இருந்து வந்தால் 7 நாட்கள் தனிமை – தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

அந்த மாநிலங்களில் இருந்து வந்தால் 7 நாட்கள் தனிமை – தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. மக்கள் மத்தியில் கொரோனா அச்சம் நீங்கி, மீண்டும் பழைய படியே அலட்சியத்துடன் செயல்படுவதால் பாதிப்புகள் அதிகரித்திருக்கிறது. கடந்த மாதம் 10 ஆயிரத்துக்குள்ளாகவே பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு தற்போது 13 ஆயிரத்தை கடந்துள்ளது. அதே போல, உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

அந்த மாநிலங்களில் இருந்து வந்தால் 7 நாட்கள் தனிமை – தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்புகள் பெருமளவு பதிவாகியிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கொரோனாவைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மாநகரில் மாஸ்க் அணியாதவர்களிடம் ஒரே நாளில் ரூ.45 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநிலங்களில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வோர் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

அந்த மாநிலங்களில் இருந்து வந்தால் 7 நாட்கள் தனிமை – தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில், கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் கட்டாயம் 7 நாட்கள் வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அம்மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.