ஜோலார்பேட்டையில் கூலி தொழிலாளி கொலை வழக்கில் 7 பேர் கைது

 

ஜோலார்பேட்டையில் கூலி தொழிலாளி கொலை வழக்கில் 7 பேர் கைது

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே வாகனத்திற்கு வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில், 7 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

ஜோலார்பேட்டையில் கூலி தொழிலாளி கொலை வழக்கில் 7 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி காந்திநகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பார்த்திபன். இவர் கட்டப்பஞ்சாயத்து தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிது. இந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி அன்று பார்த்திபனுக்கும், அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி அனுமுத்து என்பவருக்கும் இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற பார்த்திபனை, காந்திநகர் அருகேயுள்ள செங்கல்சூளை பகுதியில் மர்மநபர்கள் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்று விட்டு தப்பியோடினர்.

ஜோலார்பேட்டையில் கூலி தொழிலாளி கொலை வழக்கில் 7 பேர் கைது

இந்த கொலை சம்பவம் குறித்து திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலு தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், வாகனத்திற்கு வழிவிடுவது தொடர்பான தகராறில் அதே பகுதியை சேர்ந்த பால்வியாபாரி அனுமுத்து (65), அருள்(41), சேட்டு (36), ஆஞ்சி (66) உள்ளிட்ட 11 பேர் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, அனுமுத்து உள்ளிட்ட 7 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பாபு, காந்தி, ஆதித்தன் உள்ளிட்ட 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.