7 மற்றும் 7 புரோ ஸ்மார்ட்போன்கள் ரியல்மி அறிமுகம்

 

7 மற்றும் 7 புரோ ஸ்மார்ட்போன்கள் ரியல்மி அறிமுகம்

ரியல்மி நிறுவனம், 7 மற்றும் 7 புரோ ஆகிய 2 வகை புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

7 மற்றும் 7 புரோ ஸ்மார்ட்போன்கள் ரியல்மி அறிமுகம்

இதில் ரியல்மி 7 போனின் விலை, 14 ஆயிரத்து 999 ரூபாயிலிருந்தும், ரியல்மி 7 புரோ போன், 19 ஆயிரத்து 999 ரூபாயிலிருந்தும் தொடங்குகிறது. இரண்டு போன்களுமே ஆண்டிராய்ட் 10 இயங்குதளத்தில் இயங்குகிறது. அதேப்போல இரண்டு போன்களிலும் பின்புறம் 64 மெகா பிக்சல் சோனி கேமராவுடன் கூடிய 4 கேமரா செட் அப் புடன் வெளிவந்துள்ளது. செல்பி கேமராவை பொறுத்தவரை 7 புரோவில் 32 மெகா பிக்சல் கேமராவும், ரியல்மி 7 போனில் 16 மெகா பிக்சல் கேமராவும் உள்ளது.

7 மற்றும் 7 புரோ ஸ்மார்ட்போன்கள் ரியல்மி அறிமுகம்

இதில் ரியல்மி 7 போன், 6.5 இன்ச் ஃபுல் எச்டி திரை, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி95 புரோசசருடன் வெளிவந்துள்ளது. அதே சமயம் ரியல்மி 7 புரோ, 6.4 இன்ச் ஃபுல் எச்டி சூப்பர் அமோலெட் திரை, ஆக்டா கோர் ஸ்நாப்டிராகன் 720ஜி பிரோச்சருடன் வருகிறது.

7 மற்றும் 7 புரோ ஸ்மார்ட்போன்கள் ரியல்மி அறிமுகம்

மேலும், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் ரியல்மி 7 போனுடன் 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜரும், 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் 7 புரோ 65 வாட்ஸ் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜருடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த 2 புதிய போன்களில் ரியல்மி 7 போன், வரும் 10ம் தேதி முதலும், புரோ போன் 14ம் தேதி முதலும் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளத்திலும் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது.

-முத்துக்குமார்