7.5 % உள்ஒதுக்கீடு மசோதா : இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

7.5 % உள்ஒதுக்கீடு மசோதா : இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி இன்று சந்திக்கிறார்.

7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி இன்று சந்திக்கிறார். பிற்பகல் 3.15 மணிக்கு ராஜ்பவனில் ஆளுநரை சந்திக்கும் முதல்வர் பழனிசாமி 7.5% உள் இடஒதுக்கீட்டுக்கு உடனே ஒப்புதல் தர வேண்டும் என ஆளுநரை வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.

7.5 % உள்ஒதுக்கீடு மசோதா : இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சட்டப்பேரவையில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு மசோதா நிறைவேற்றியது. தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காத நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார்.

7.5 % உள்ஒதுக்கீடு மசோதா : இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

முன்னதாக 7.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்தனர். பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு இடஒதுக்கீடு தொடர்பாக கடிதம் எழுதினார். அந்த கடிதத்திற்கு பதிலளித்த ஆளுநர், 7.5% இடஒதுக்கீடு பதிலளிக்க இன்னும் 2, 3 வாரங்கள் ஆகும் என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.