7 லிட்டர் தண்ணீரை குடித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

7 லிட்டர் தண்ணீரை குடித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்த பட்சம் ஒரு லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் அதிக தண்ணீர் குடித்ததே ஆபத்தில் கொண்டுபோய் விட்ட சம்பவம் சுவிட்சர்லாந்தில் அரங்கேறியுள்ளது. 

சுவிட்சர்லாந்தில் இடைவெளி விடாமல் தொடர்ந்து 7 லிட்டர் தண்ணீரைக் குடித்த பெண்ணுக்கு பக்கவாதம் நோய் வந்துள்ளது. உடனடியாக மயக்கமடைந்த அந்த பெண்ணை, அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பெண்ணின் ரத்தத்தில் சோடியத்தின் அளவும் குறைந்ததே பக்க வாதத்திற்கு வந்ததற்கு காரணம் என தெரிவித்தனர். சோடியத்தின் அளவு குறைந்தால் மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டு வலிப்பு வந்துள்ளது. 

drinking water

அளவுக்கு அதிகமாக ஒரே நேரத்தில் தண்ணீர் அருந்துவதால் இதுபோன்ற பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறிய மருத்துவர்கள், ஒரே நேரத்தில் தண்ணீர் அதிகமாக குடித்தால் ரத்தத்திலுள்ள சோடியத்தின் அளவு குறையும் என்றும் இதனால் மூளை பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். 

கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தண்ணீர் அருந்தும் போட்டியில் கலந்து கொண்ட 28 வயதான பெண் ஒருவர் ஒரே நேரத்தில்க் 6.5 லிட்டர் தண்ணீரை அருந்தியதால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது.