7 பேரையும் ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

 

7 பேரையும் ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு பலரும் தங்களது வரவேற்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

<blockquote class=”twitter-tweet” data-lang=”en”><p lang=”ta” dir=”ltr”>திரு ராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை முடிவினை ஏற்று, அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யும் ஆணையை பிறப்பிக்க வேண்டும்!</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href=”https://twitter.com/mkstalin/status/1038782141641838592?ref_src=twsrc%5Etfw”>September 9, 2018</a></blockquote>
<script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

இந்நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், திரு ராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை முடிவினை ஏற்று, அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யும் ஆணையை பிறப்பிக்க வேண்டும் என பதிவிட்டு இருக்கிறார்.

#mkstalin #stalin #perarivalanrelease