7 கோடியை ஏப்பம்விட்ட விஷால்; முதல்வரிடம் கோரிக்கை வைத்த தயாரிப்பாளர்கள்

 

7 கோடியை ஏப்பம்விட்ட விஷால்; முதல்வரிடம் கோரிக்கை வைத்த தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு எதிராக இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் சிலர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு எதிராக இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் சிலர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் மீது ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், .எல்.அழகப்பன் உள்ளிட்டோர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து, சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். எதிரனியினரின் பூட்டை உடைக்கச் சென்ற விஷால், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து, கைது செய்யப்பட்டார்.

tfpc

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடக்கும் ஊழல் குறித்தும், விஷால் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து எதிரனியினர் மனு அளித்தனர். இயக்குநர் பாரதிராஜா தலைமையில் ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், .எல்.அழகப்பன் உள்ளிட்டோர் முதல்வருடனான சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.

விஷாலுக்கு எதிராக அவர்கள் அளித்த மனுவில்,தயாரிப்பாளர் சங்கத்துக்கு 4 மாதங்களில் தேர்தல் நடத்த வேண்டும். விஷால் தலைமையிலான சங்க நிர்வாக குழுவினரிடம் சங்க கணக்குகள் குறித்து விளக்கம் கேட்க வேண்டும். சங்கத்தின் காப்புநிதி 7.85 கோடி ரூபாய் பொதுக்குழுவின் ஒப்புதல் பெறாமல் செலவு செய்யப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

tfpc

முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தை படுகுழிக்குத் தள்ளிய விஷால், 150 சங்க உறுப்பினர்களை அதிரடியாக நீக்கி ஹிட்லர் போல் இருக்கிறார். தமிழ் ராக்கர்ஸ் மற்றும் லைகாவிடம் இருந்து ரூ.33 கோடி வாங்கியுள்ளார். தயாரிப்பாளர்களை அழிக்கும் கொடியவர்களுடன் கூட்டு சேர்ந்து சங்கத்தை அழிக்கிறார் என்று குற்றம்சாட்டினர்.

tfpc

இதைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்க கணக்கு வழக்குகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. சங்க வைப்பு நிதியாக இருந்த ரூ.7.85 கோடி எங்கே போனது என்றே தெரியவில்லை. இது தொடர்பாக அரசிடம் முறையிட்டுள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்என்றார்.