கணவனின் தனிமனித இடைவெளியால் 6 மாதமாக தவிக்கும் புதுமணப்பெண்! இனி தளர்வுகள் இருக்குமென்று போலீசார் அறிவுறுத்தல்

 

கணவனின் தனிமனித இடைவெளியால்  6 மாதமாக  தவிக்கும் புதுமணப்பெண்! இனி தளர்வுகள் இருக்குமென்று போலீசார் அறிவுறுத்தல்

தாலிகட்டிய நாள் முதலாக ஆறு மாதங்களாக மனைவியிடம் நெருங்காமல் கொரோனாவினால் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் கணவனின் செயல் அதிரவைக்கிறது. அரசே தளர்வுகள் அறிவித்த பின்னரும் மனைவியிடம் அருகே சென்று பேசுவதற்கு கூட கட்டுப்பாடுகளை கணவன் தளர்த்திக்கொள்ளாததால்,மனைவி போலீசுக்கு போயிருக்கிறார்.

ம.பி. போபாலில் கடந்த ஜீன் மாதத்தில் கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றி நடைபெற்ற திருமணத்தில், இத்தனை மாதங்கள் ஆகியும் கணவன் இன்னமும் கொரோனா தனிமனித இடைவெளியால் தன்னிடம் நெருங்காமல் இருப்பது கண்டு பொறுமை இழந்திருக்கிறார் புதுமணப்பெண்.

கணவனின் தனிமனித இடைவெளியால்  6 மாதமாக  தவிக்கும் புதுமணப்பெண்! இனி தளர்வுகள் இருக்குமென்று போலீசார் அறிவுறுத்தல்

தன்னிடம் நெருக்கமாக கூட இருக்க வேண்டாம். தன் அருகே வந்து பேசக்கூட கணவர் மறுப்பது ஏன் என்று கொந்தளித்த புதுமணப்பெண், கணவன் ஆண்மைக்குறைவு உள்ளவராக இருப்பாரோ என்று சந்தேகித்தவர், ஏமாற்றி தனக்கு திருமணம்செய்துவிட்டார்கள் என்று போலீசில் சென்று புகார் அளித்திருக்கிறார்.

கணவரை அழைத்து போலீசார் விசாரித்தபோது, கொரோனா காலத்தில்தான் திருமணம் செய்தோம். தனிமனித இடைவெளியால் ஒன்றிரண்டு மாதங்கள் தள்ளி இருப்பதுதான் நல்லது என்று சொல்லிவிட்டேன். திருமணத்திற்கு பிறகு மனைவியின் உறவினர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், நான் மனைவியிடம் நெருங்கவே பயந்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.

அரசே ஏகப்பட்ட தளர்வுகளை அறிவித்துவிட்டது. அதனால் நீங்களும் சில தளர்வுகளை முன்னெடுக்கலாம். அதுதான் உங்க குடும்ப வாழ்க்கைக்கு நல்லது என்று போலீசார் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தனர்.

இனி தளர்வுகள் இருக்கும் என்று புதுமணப்பெண்ணுக்கு நம்பிக்கை கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள் போலீசார்.