பாலாவின் நேர்மை விளையாட்டு… மீண்டும் கேப்டனான ரம்யா! பிக்பாஸ் 68-நாள்

 

பாலாவின் நேர்மை விளையாட்டு… மீண்டும் கேப்டனான ரம்யா! பிக்பாஸ் 68-நாள்

இயல்பான வாழ்க்கையில் ஒரு சண்டையின் ஆயுள் என்பதற்கும் பிக்பாஸில் ஒரு சண்டையும் ஆயுள் என்பதற்கு நிறைய வேறுபாடு இருக்கிறது. ஏனெனில், வெளியே உள்ளவர்கள் சண்டை போட்டுவிட்டு, ஒரு வாரம் பத்து நாட்கள் இருவரும் பார்த்துக்கொள்ளாமல் தவிர்க்க வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், பிக்பாஸ் வீட்டில் கொலை விழும்படி சண்டை போட்டாலும் அடுத்த சில மணி நேரத்தில் அவர்களின் முகத்தைப் பார்க்க வேண்டியிருக்கும்; பேச வேண்டியிருக்கும். அப்படியே தவிர்த்தாலும், பிக்பாஸ் டாஸ்க் கொடுத்து அவர்களோடு ஜோடியாக விளையாட வேண்டும். அதைக் கையள்வதே மிகத் திறமையான ஆட்டம். அதற்கான வாய்ப்புகள் இன்று பலருக்கும் அமைந்தது. அதைப் பற்றிக் கட்டுரையில் பார்ப்போம்.

67-ம் நாள் தொடர்ச்சி…

’என்னையே ஜெயிலுக்கு அனுப்பிட்டீங்களா?’ என்ற ஆதங்கம் அனிதாவுக்கு. சாதாரணமாகவே உணர்ச்சிவசப்படும் அனிதா, இந்த வாரம் கிச்சனில் அதிக வேலை செய்திருப்பார் போல. அதனால் கூடுதலாக எரிச்சலும் கோபமும் வந்துவிட்டது. கேப்டனாக இருந்து ஜெயிலுக்குப் போனதைச் சொல்லி ரியோவுக்கு ஸ்டார் குறைத்துக் கொடுத்தவர் அனிதா. இப்போ ஓடமும் வண்டியில் ஏறியிருக்கிறது.

பாலாவின் நேர்மை விளையாட்டு… மீண்டும் கேப்டனான ரம்யா! பிக்பாஸ் 68-நாள்

ரியோ மெதுவாக வந்து அனிதாவிடம் சமாதானம் பேசத் தொடங்கினார். நானும் பேசுவேன் என்ற முன்நிபந்தனையோடுதான் பேசத் தொடங்கினார். ஆனால், அதிகம் பேசியது அனிதா தான்.

தானும் நிஷாவும் ரியோவுக்குப் பிடிக்காத ஒரே மாதிரி செயலைச் செய்தோம். என்னை ரிஜெக்ட் செய்தவர் ஏன் நிஷாவை செய்ய வில்லை என்பது அனிதா வாதம்.

நிஷாவின் செயல் பிடிக்கல… உன்னிடம் நான் சொல்லியும் மறுத்து செய்ததால் அந்த விளையாட்டு போரடித்தது. நிஷாவின் செயலுக்கு அவரை நாமினேட் செய்வேன் என்பது ரியோவின் வாதம்.

பாலாவின் நேர்மை விளையாட்டு… மீண்டும் கேப்டனான ரம்யா! பிக்பாஸ் 68-நாள்

இருவர் தரப்பில் இருந்து பார்த்தால் இருவருடைய வாதமும் நியாயம்தான். ஆனால், ரியோ எதிர்தரப்பை சற்று இணக்கத்தோடு அணுகும் விதம், சற்று மேம்பட்டதாக இருக்கிறது. ஆனால், எதிர்தரப்பில் இருப்பவர்களை எதிரியாகப் பார்க்கும் அனிதாவின் போக்கு மாற்றிக்கொள்ள வேண்டியதே. ஆனால், அனிதா பாதிக்கப்பட்டு ஜெயிலில் இருக்கிறார். அதனால், அவரும் ரியோவின் அணுகுமுறையோடு இதை எதிர்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது தவறே.

இருவரும் சண்டையில் பெரிதாக யாரும் நுழைய வில்லை. ஆனால், இருவரின் வாதங்களை மட்டும் வைத்து ரம்யா ஒரு விளக்கம் கேட்டு தெளிவு பெற்றார். அவரின் விசாரனையும் தெளிவும் சரியாகவே இருந்தது. ஆனால், எல்லாவற்றிலும் அப்படிக் கேட்பதில்லை என்பது ஆரியின் குற்றச்சாட்டு.

அனிதாவுக்கும் ரியோவுக்கும் அவ்வளவு சண்டை. ஆனால், ஜெயிலிருந்து வெளியே வந்ததும், ரியோ – ஷிவானி – ரியோ ஜாலியாக டிஆர் மாதிரி வார்த்தையை வைத்து விளையாடிக்கொண்டிருக்க, அனிதா, நிஷாவின் தோளில் சாய்ந்துகொண்டு ‘இதுக்குப் பதில் ஜெயிலிலேயே இருந்திருக்கலாம்’ எனச் சொல்லிகொண்டிருந்தார்.

பாலாவின் நேர்மை விளையாட்டு… மீண்டும் கேப்டனான ரம்யா! பிக்பாஸ் 68-நாள்

‘ஷிவானி இப்பதான் ஜோக் பழகுது. பார்த்து விளையாடு’ என்று ரியோ சொன்னது செம. ரியோ, நிஷா எல்லாம் பழைய ஃபார்ம்க்கு வருகிறார்கள் என்று தோன்றுகிறது. பிக்பாஸை இன்னும் 25 நாட்கள் எக்ஸ்ட்ரன் பண்ணிடலாமா?

68-ம் நாள்

பாட்டு முடிந்ததுமே, ‘முதல் நாள் டாஸ்க்கில் பெயர் வைத்தது பற்றிய பஞ்சாயத்தை ஆரி – பாலாவிடம் அணத்திக்கொண்டிருந்தார் அனிதா.

குழு குழுவாக தாங்கள் நண்பர்களான கதையைச் சொல்ல சொன்னார் பிக்கி. ஆனால், ரியோ – கேபி – சோம், அனிதா – பாலா – ஆரி இந்த குழுக்கள் பேசுவதை மட்டுமே ஒளிபரப்பினார். இதில் ரியோ குழு கதை நன்றாக இருந்தது. அனிதா குழு ’சுறா’ மொக்கை.

பாலாவின் நேர்மை விளையாட்டு… மீண்டும் கேப்டனான ரம்யா! பிக்பாஸ் 68-நாள்

கேப்டன் டாஸ்க்கை அறிவித்தார் பிக்கி. ஏற்கெனவே உள்ள சீசன்களில் இடம்பெற்ற விளையாட்டுதான். பல கட்டங்களில் முகம் துண்டு துண்டாக இருக்கும். அதைச் சேர்க்க வேண்டும்.

நிஷா – ரம்யா – பாலா மூவரும் வேகவேகமாக வேலைகளில் இறங்கினர். நிஷாவிடம் எந்த ஐடியாவும் இல்லை. ஆனால், ரம்யா ஒரு கோடு முடிவடைவதை வைத்து அடுத்த பாக்ஸை எடுப்பது என திட்டமிட்டு விளையாடினார். பாலா வேகமாகவும் ப்ளானிங்காகவும் விளையாடி முதலில் முடித்தார்.

பாலாவின் நேர்மை விளையாட்டு… மீண்டும் கேப்டனான ரம்யா! பிக்பாஸ் 68-நாள்

பாலா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அவர் அந்த வார அணிகளைப் பிரிக்க உட்கார வைத்துவிட்டு, “நான் ஒழுங்கா விளையாடல, நான் அடுக்கினதில் ஒரு தவறு இருக்கு’ என நேர்மையாக ஒத்துக்கொண்டார். (இன்னிக்கு கமலிடம் பாராட்டு இருக்கு பாலா). பிக்கியும் தன் தவற்றை ஒப்புக்கொண்டு ‘ மூன்றாம் அம்பெயர் கண்ணாடி போடல’ என்று எஸ்கேப்பானார். ஆனால், அதையே ரம்யா, பாலா கண்ணாடி போடல என மாற்றிச் சொல்ல, ‘நான் அப்படி சொல்லல… என்னைக் கோர்த்துவிடுறார்’ என பிக்கியும் ஜாலி மூடில் இருந்தார் போல.

மீண்டும் கேப்டனாகியிருக்கிறார் ரம்யா. கிச்சன் டீம் பிரிக்கையிலேயே ஆரிக்கும் அர்ச்சனாவுக்கும் சண்டை எட்டிப்பார்த்தது. கிச்சன் டீமில் வலிய சென்று பாலா சேர்ந்தார்.

பாலாவின் நேர்மை விளையாட்டு… மீண்டும் கேப்டனான ரம்யா! பிக்பாஸ் 68-நாள்

இந்த எப்பிசோட்டின் இடையில் ஷிவானிக்கு நாமினேஷன் பயம் வர, அர்ச்சனாவின் மடிமீது படுத்து அழுதார். அர்ச்சனாவின் அன்பைப் பற்றி பலரும் குறை சொன்னாலும், அந்த அன்பு அங்கே தேவைப்படுகிறது. அன்பான நட்பு என்று சொல்லப்படுவதைக் காட்ட பாலா இருந்தாலும், டான்ஸில் சேர்ந்து ஆட ரம்யா இருந்தாலும் உடைந்து போகிற நேரத்தில் மடி சாய்த்துகொள்கிற ஒரு நபர் தவிர்க்க முடியாதவராகி விடுகிறார். அந்த வகையில் அர்ச்சனாவின் இருப்பு நிச்சயம் பாராட்டுக்கு உரியது. அவரும் எந்த குழுவில் உள்ளவராக இருந்தாலும் துயரமான நேரத்தில் தோளில் சாய்த்துக்கொள்கிறார்.

பின்கதை சுருக்கத்திற்கு லீவு விட்டிருந்த பிக்கி, நேற்று தம் கரகர குரலில் பாட்டைப் பாடி சுபம்.