66வது தேசிய திரைப்பட விருதுகள்: நடிகை கீர்த்தி சுரேஷ், அக்ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்களுக்கு விருது!

 

66வது தேசிய திரைப்பட விருதுகள்: நடிகை கீர்த்தி சுரேஷ், அக்ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்களுக்கு விருது!

தொழில்நுட்ப திரைப்படத்துக்கான விருது திருக்கோவிலூரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் இயக்கிய “ஜிடி நாயுடு – தி எடிசன் ஆஃப் இந்தியா” திரைப்படம் தட்டி சென்றது.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தயாராகும் திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்-நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களைத்  தேர்வுசெய்து   தேசிய விருதுகளை வழங்கி வருகிறது.

ttn

இந்நிலையில் 66 வது தேசிய திரைப்பட விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று டெல்லியில்   இந்த விருதுகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார். அதில் சிறந்த நடிகருக்கான விருதை பாலிவுட் படமான  அந்தாதுனில்  நடித்த ஆயுஷ்மான் குர்ரானாவும் உரி தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் படத்தில் நடித்த விக்கி கௌஷலும்  பெற்றுக்கொண்டனர். அதேபோல் சிறந்த நடிகைக்கான விருது நடிகை  கீர்த்தி சுரேஷுக்கு வழங்கப்பட்டது.

ttn

சிறந்த இயக்குநருக்கான விருதை “உரி தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்” திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தார் பெற்றுக்கொண்டார். இந்த படம் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதையும்  பெற்றது. சிறந்த தமிழ் படமாக பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய பாரம் திரைப்படம் தட்டிச்சென்றது. அதேபோல் பத்மாவத், கே.ஜி.எஃப், உரி உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் விருது கிடைத்துள்ளது.சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திரைப்படத்துக்கான விருது  திருக்கோவிலூரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் இயக்கிய “ஜிடி நாயுடு – தி எடிசன் ஆஃப் இந்தியா” திரைப்படம் தட்டி சென்றது.

ttn

இதே விழாவில்  பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனுக்கு  தாதாசாகேப் பால்கே விருது அளித்து கௌரவிக்கப்பட இருந்த விழாவில் காய்ச்சல் காரணமாக அமிதாப் விழாவில் கலந்துகொள்ளவில்லை என்று குறிப்பிடத்தக்கது.