6,500 பேரை காவு வாங்கிய கால்பந்து திருவிழா

 

6,500 பேரை காவு வாங்கிய கால்பந்து திருவிழா

எதிர்வரும் 2022ம் ஆண்டின் உலககோப்பை கால்பந்து திருவைழா கத்தார் நாட்டில் நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இப்போட்டியினை நடத்தும் உரிமத்தினை பெற்றது கத்தார் அரசு.

6,500 பேரை காவு வாங்கிய கால்பந்து திருவிழா

இதையடுத்து 7 பிரம்மாண்ட விளையாட்டு அரங்கங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. மேலும், விமான நிலையம், சாலைகள், ஓட்டல்கள் என்று பல்வேறு கட்டுமான பணிகளை கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது கத்தார்.,

6,500 பேரை காவு வாங்கிய கால்பந்து திருவிழா

இந்த கட்டுமான பணிகளுக்காக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து கத்தாருக்கு வேலைக்கு சென்றனர். இப்படி புலம்பெயர்ந்து வேலைக்கு சென்றவர்களில், கட்டுமான பணியில் ஈடுபட்டு ஒரு வாரத்திற்கு சராசரியாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

2011- 2020 காலகட்டத்தில் இந்தியா, இலங்கை, நேபாளம், வங்கதேசம் நாடுகளின் தரவுப்படி 5927 தொழிலாளர்கள் கத்தாரில் உயிரிழந்துள்ளனர் என்றும், அதாவது இந்தியர்கள் – 2711 பேர் என்றும், நேபாளிகள் -1641 பேர் என்றும், வங்க தேசத்தவர்கள் 1018 பேர்கள் என்றும், பாகிஸ்தானியர் 874 பேர் என்றும், 557 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவருகிறது.

6,500 பேரை காவு வாங்கிய கால்பந்து திருவிழா

2010 -2020 ஆண்டின் பாகிஸ்தான் தரவின்படி 824 பாகிஸ்தான் புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இப்படி 6 500 பேர் உயிரிழந்திருக்க, 37 பேர் மட்டுமே கட்டுமான பணியில் இருக்கும்போது உயிரிழந்துள்ளனர் என்று கத்தார் அரசு தெரிவித்திருக்கிறது.

புலம்பெயர் தொழிலாளர்களை கத்தார் அரசு பாதுகாக்க தவறிவிட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.