65 ஆண்டுகள் குளிக்காமல் வாழும் மனிதர்! உலகின் நெம்.1 அழுக்கு மனிதர்

 

65 ஆண்டுகள் குளிக்காமல் வாழும் மனிதர்!  உலகின் நெம்.1 அழுக்கு மனிதர்

ஒரு நாள் குளிக்காமல் விட்டாலே ஒரு மாதிரியாக இருக்கிறது என்று சொல்லுபவர்களுக்கும், இன்னும் காலையில் ஒரு வேளை குளித்துவிட்டு இரவில் குளிக்காமல் படுத்தால் ஒரு மாதிரியாக இருக்கிறது என்று சொல்லுபவர்களுக்கும் இந்த தகவல் ஒரு மாதிரியாகத்தான் இருக்கும்.

65 ஆண்டுகள் குளிக்காமல் வாழும் மனிதர்!  உலகின் நெம்.1 அழுக்கு மனிதர்

ஒரு மனிதர் 65 ஆண்டுகள் குளிக்காமல் இருக்கிறார். இதைக்கேட்டாலே குமட்டிக்கொண்டு வருகிறது என்று சொன்னால், அவரின் உணவுப்பழக்கம் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பே இல்லை.

ஈரானில் வசிக்கிறார் 83வயதான அந்த அழுக்கு மனிதர். தண்ணீரை மேலே கொட்டிக்கொண்டால் இறந்துவிடுவோம் என்கிற எண்ணம் சிறு வயது முதல் அவரின் மனதில் ஆழ பதிவிந்துவிட்டது. இதனால் தண்ணீரைக் கண்டாலே மரணத்தை பார்ப்பது மாதிரி நடுங்குகிறார். தண்ணீர் பட்டால் உடலில் நோய் உண்டாகும் என்றும் நினைக்கும் அந்த முதியவர், 65 ஆண்டுகள் குளிக்காமல் இருந்தாலும் நோய் நொடி இல்லாமல்தான் வாழ்ந்து வருகிறார். இத்தனைக்கும் சிகரெட்டை புகைத்து தள்ளுகிறார் மனிதர்.

முதியவரின் குளிக்காத கதையே ஒரு உவ்வே கதை என்றால், அவரின் உணவுப்பழக்கம் அதைவிடவும் மேலானதாக இருக்கிறது.

அழுகிய இறைச்சியை மட்டுமே சாப்பிடுகிறார். வீடுகளில் சமைத்து சாப்பிடும் உணவு இவருக்கு பிடிப்பதில்லை. சாலையில் அடிபட்டு சாகும் விலங்குகளின் கெட்டுப்போன இறைச்சிதான் அதிகம் விரும்பும் சாப்பிடும் சாப்பாடாம்.