65லும் ஆசை வரும், ஆசையுடன் மோகம் வரும், பின்னாடியே போலீஸும் வரும்!

 

65லும் ஆசை வரும், ஆசையுடன் மோகம் வரும், பின்னாடியே போலீஸும் வரும்!

எட்டு மணி நேர கால தாமதத்தால், பயணிகளும் பணிப்பெண்களும் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். முதியவர் மட்டும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு எண்ணிய கம்பிகளையே திரும்பத்திரும்ப எண்ணிக்கொண்டிருக்கிறார்.

செர்பிய தலைநகர் பெல்கிரேட் நகரிலிருந்து ஜெர்மனிக்கு 130 பயணிகளுடன் கிளம்ப தயாராக இருந்த லூஃப்தான்சா விமானத்தில் ‘பாம்ப்’ வைக்கப்பட்டிருப்பதாக ஒரு தொலைபேசி அழைப்பு வர, பதறிப்போன விமான நிலைய அதிகாரிகள் விமானத்தை சல்லடைபோட்டு தேடியும், அமிர்தாஞ்சன் பாம்ப்கூட இல்லை. அதேநேரம், வெளியே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தொலைபேசி அழைப்பை விடுத்தது யார் என தேடினால், அவர்கள் வலையில் சிக்கியது 65 வயது முதியவர். போலீசாரின் கவனிப்பில், அந்த வெடிகுண்டு புரளியை கிளப்பி விட்டது தான்தான்  என அந்த முதியவர் ஒப்புக்கொண்டார்.

Bomb Check

‘விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்ப காரணம் என்ன’ என கேட்ட போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியளித்தார் அந்த முதியவர். அதாவது, மேற்படி விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்த ஒரு பெண்ணை முந்தின நாள் சந்தித்ததாகவும், அவருக்கு அப்பெண்ணை மிகவும் பிடித்துவிட்டதாகவும், வெடிகுண்டு புரளியை கிளப்பிவிட்டால், விமானத்தை நிறுத்திவிடுவார்கள், பணிப்பெண்ணுக்கு லீவு கொடுத்து ஹோட்டலுக்கு அனுப்பி விடுவார்கள், அந்த ஹோட்டலில் சென்று அவரை ‘தனிமையில்’ சந்திக்கலாம் என்பதால் மேற்படி புரளியை கிளப்பியதாக சொல்லியிருக்கிறார். அவர் சொன்னதில் பாதி சரியாக நடந்தது. எட்டு மணி நேர கால தாமதத்தால், பயணிகளும் பணிப்பெண்களும் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். முதியவர் மட்டும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு எண்ணிய கம்பிகளையே திரும்பத்திரும்ப எண்ணிக்கொண்டிருக்கிறார்.