‘நீங்க வெளியே போகலாம்’ பிக்பாஸே கடுப்பான தருணம் – பிக்பாஸ் 61-ம் நாள்

 

‘நீங்க வெளியே போகலாம்’ பிக்பாஸே கடுப்பான தருணம் – பிக்பாஸ் 61-ம் நாள்

’உங்களுக்கு என்ன கொடுத்தாலும் இப்படியே செய்தால் நான் எப்படியா கண்டண்ட் எடுக்கிறதுனு பிக்பாஸ் சாட்டையை எடுக்கப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை’ என்று 60-நாள் எப்பிசோட் பற்றிய கட்டுரையில்தான் எழுதியிருந்தேன். உடனே அது நடக்கும் என நானே எதிர்பார்க்க வில்லை. ஆமாம். பொறுத்தது போதும் என பிக்பாஸே பொங்கி எழுந்துவிட்டார். ஒவ்வொருவரையும் தனியே கூப்பிட்டு ரவுண்ட் கட்டிவிட்டார். என்ன செய்வது… என்ன சொல்வது… இவ்வளவுதான் நானா… என்று குமறிப்போனார்கள் போட்டியாளர்கள். செம கடுப்பில் ஒரு பிடி பிடித்தார் பிக்கி. அதைப் பற்றி விரிவாகக் கட்டுரையில் பார்ப்போம்.

பிக்பாஸ் 61-0 நாள்

’டாஸாக்கு டாஸாக்கு…’ என காலையில் பாட்டு போட்டபோதே ஹவுஸ்மேட்ஸ் உஷாராகியிருக்கணும். இன்னிக்கு ஏதோ பெரிய ஆப்பு இருக்குனு. என்ன பெரிய டாஸ்க் கொடுக்கபோறீங்க? பிஸ்கெட் திங்கிறது… ஃபேஷன் ஷோதானே… என அலட்சியமாக இருந்துவிட்டார்கள்.

‘நீங்க வெளியே போகலாம்’ பிக்பாஸே கடுப்பான தருணம் – பிக்பாஸ் 61-ம் நாள்

மார்னிங் டாஸ்க். வேலை செய்துகொண்டே டான்ஸ் ஆடுவது எப்படி எனக் கற்றுக்கொடுத்தார். டான்ஸ் ஆடிக்கொண்டே டிசர்ட் போட்டுக்கொள்வதைப் பார்த்தவர்கள் இதை நானே செய்வேன் என நினைத்திருக்கலாம். ஆனால், போட்டு முடித்ததும் இரண்டு பல்டி அடித்தபோதுதான் புருவங்களை உயர்த்தினர். கிச்சன் டீம், வாஷிங் டீம் என அந்த வேலைக்கு ஏற்றவாறு டான்ஸ் ஆடிக்காட்டினார்கள்.

‘உங்களுக்கு வராத விஷயத்தை நீங்க செய்யலையா… காமெடிக்கூட அப்படித்தானே செய்யறீங்க’னு நேற்று ஆரி, நிஷாவிடம் கேட்டிருப்பார் போல. அதை வைத்து அர்ச்சனா, ரமேஷ், ரியோ ஒருபக்கம் அணத்திக்கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம், ஆரியிடமே நிஷா, ‘நீங்க அது ஜோக்குக்கு சொன்னீங்களா… சீரியஸாகச் சொன்னீங்களா… என விளக்கம் கேட்டுட்டு இருந்தார்.

‘நீங்க வெளியே போகலாம்’ பிக்பாஸே கடுப்பான தருணம் – பிக்பாஸ் 61-ம் நாள்

வழக்கம் போல அனந்த சயன கோலத்தில் இருந்த ரமேஷை பிக்பாஸ், ஆக்டிவிட் ஏரியாவுக்கு அழைத்தார். அங்கே சென்றால் தனியாக ஒரு குஷன் சோபா, விதவிதமாக லைட்டெல்லாம் போட்டிருந்தது. என்ன நடக்குதுன்னே புரியலையேன்னு உட்கார்ந்தார். அருகில் இருந்த பேப்பரில் இருப்பதைப் படிக்கச் சொன்னார்.

நடந்து முடிந்த 60 நாளில் மக்களை சந்தோஷப்படுத்தும் விதமாக என்ன செய்தீர்கள் எனக் கேட்டிருந்தார் பிக்கி. யோசிக்க டைம் கிடைக்குமா என்று கேட்டார் ரமேஷ். அதையும் கொடுத்தார் பிக்கி. ஆனா, அதற்கு பிறகும், டாஸ்க் செய்தேன்… இங்கே வந்தபிறகுதான் கூச்சம் போயிடுச்சுன்னு பிணாத்தினார் ரமேஷ். ஒரு அதட்டு அதட்டி ‘நான் கேட்டது அது இல்ல… மக்களை சந்தோஷப்படுத்த என்ன செஞ்சீங்க?’என்றார். கேள்வியைப் புரிஞ்சுக்காமல் திரும்ப திரும்ப வேற பக்கம் வண்டியைத் திருப்ப, கடுப்பான பிக்கி ‘போதும் போதும் போங்க… இதைப் பத்தி யார்கிட்டேயும் சொல்லாதீங்க’னு எச்சரிச்சு அனுப்பினார்.

‘நீங்க வெளியே போகலாம்’ பிக்பாஸே கடுப்பான தருணம் – பிக்பாஸ் 61-ம் நாள்

விசாரிக்கும் அறைக்கு அடுத்து வந்தது ஆஜித். கமல் பர்த் டேக்கு பாட்டுப்பாடினேன். ஹவுஸ்மேட்ஸ் சந்தோஷப்படுத்த பாட்டு பாடினேன். மரியாதை பேசினேன். நல்லா ட்ரஸ் பண்ணினேன். என அடுக்கிக்கொண்டே போக, இடையில் நிறுத்தி, ‘மரியாதையா பேசறது… டிரஸ் பண்ணிக்கிறது எல்லாம் எல்லோரும் பண்றது… நீங்க தனித்துவமா என்னா பண்ணனீங்க?’னு கேட்க, திருதிருன்னு முழுக்க வெளியே போகச் சொல்லும் பஸ்ஸர் பெல்லைக் கடுப்போடு அழுத்தினார் பிக்கி.

வெளியே வந்தவர்களிடம் என்னாச்சு என மற்றவர்கள் கேட்க, ப்ளட் டெஸ்ட் எடுத்தாங்கனு ஒரு பொய்யைச் சொன்னார்.

‘நீங்க வெளியே போகலாம்’ பிக்பாஸே கடுப்பான தருணம் – பிக்பாஸ் 61-ம் நாள்

அடுத்து வந்தது கேபி. பேப்பரில் உள்ளதைப் படிச்சதும், சொல்றதுக்கு எங்கிட்ட நிறைய இருக்கேன்னு டக்டக்ன்னு ஆரம்பிச்சதைப் பார்த்து பிக்கியே மகிழ்ந்திருக்கக்கூடும். ஆனால், இவரும் காலையில டான்ஸ் ஆடுவேன். மற்ற நேரத்துல டான்ஸ் ஆடுவேன்னு வண்டியைத் திரும்ப, கடுப்பான பிக்கி, வேற சொல்லுங்க… வேற சொல்லுங்கன்னு சொன்னதும் என்ன செய்ய என்று முழித்தார்.  வாழ்க்கையை எப்படி வாழனும்னு கத்துக்கேட்டேன் என்றார். ‘அது பாடம்.. நீங்க என்ன காண்டிரிஃப்யுஷன் பண்ணீருக்கீங்க?’னு கேட்டார் பிக்கி. பாடம்தான் காண்டிரிஃப்யூஷன் என புது விளக்கம் சொன்னார். வெறுப்பின் உச்சத்துக்கே போன பிக்கி, பஸ்ஸை அடித்தார்.

வெளியே வந்து ஆஜித் – கேபி பேசிட்டு இருந்தப்ப, ‘இப்ப என்ன நேரம்’னு கேபி கேட்டதற்கு, ‘கெட்ட நேரம்’னு டைமிங் அடித்தார் ஆஜித்.

இன்னொரு பக்கம் ‘ஷனம்க்காக ஏன் நின்னுனீங்க’னு ஆரியைப் பிடித்து உலுக்கினார்கள் அனிதாவும் பாலாவும். ஷனமும் அனிதாவும் ஒன்றாகத் திரிந்தார்கள். இப்போ என்னாச்சுன்னு தெரியலையே?

‘நீங்க வெளியே போகலாம்’ பிக்பாஸே கடுப்பான தருணம் – பிக்பாஸ் 61-ம் நாள்

சோம்ஸ் விசாரணை அறைக்கு வந்தார். தொண்டையைச் செறுமிக்கொண்டு, “2010-ல அழகிய தமிழ்மகன் ஷோவுல கலந்துகிட்டேன்…’னு பழைய ரெக்கார்ட்டை நூத்தியெட்டாவது முறையாக ஆரம்பிச்ச சோம்க்கு எதிராக பிக்கி உட்கார்ந்திருந்தால் கையில் கிடைச்சதை எடுத்து எறிஞ்சிருப்பார். அந்த டோன்லேயே ’வேற சொல்லுங்க’னு சொன்னார். ‘அப்பறம் இந்த வாய்ப்பைக் கொடுத்த சேனலுக்கு நன்றி மக்களுக்கு நன்றி’னு ஆரம்பிச்சதும், ‘சோம் இது அந்த டாஸ்க் இல்ல…’னு ஒரு குத்து குத்தினார். ‘100 நாள் இருப்பேன். எனக்கு நீங்க சப்போர்ட் கொடுப்பீங்க’னு பிணாத்த, டென்ஷனான பிக்கி பஸ்ஸரை அடித்தார்.

வெளியே வந்த சோம்ஸிடம் ரியோ விசாரித்தபோது ‘பேண்டை எல்லாம் கழற்றி செக் பண்ணுவாங்கனு சொன்னது ஜெர்க்கானார் ரியோ.

அடுத்து வந்தது ஷிவானி. ‘காலையில டான்ஸ் ஆடுவேன்… பாட்டு பாடுவேன். டாஸ்க் செய்வேன்’ என அங்கேயே வண்டியை சுற்றிசுற்றி வந்தார். ‘அதெல்லாம் தாண்டி என்ன செஞ்சீங்க’னு பிக்கி கேட்டதுக்கு நீண்ட நேரம் யோசிச்சு, அதைத் தவிர வேற எதுவும் பண்ணல பிக்பாஸ். மன்னிச்சிடுங்க’னு வெள்ளைக்கொடி காட்டியதும், ‘பால்தான் பொங்கும். இது பச்சைத் தண்ணி’னு முடிவுக்கு வந்த பிக்கி பஸ்ஸைரை அடித்தார். இல்லை இல்லை உடைத்தார் என்றே சொல்ல வேண்டும்.

ரம்யா உள்ளே வந்து, “உண்மையா இருக்கிறதுதான் நான் செய்த பங்களிப்பு பிக்பாஸ்’ என ஒற்றை வரியில் சொல்ல, ‘உன்னை திட்டக்கூட முடியலையேன்னு கடுப்பான பிக்கி பஸ்ஸரை அழுத்தி வெளியே அனுப்பினார்.

அடுத்து வந்தது நிஷா, “ஆஹா… பேசணுமா… தூள் கிளப்பிடலாம்னு’ ‘பட்டிமன்ற பேச்சுபோல ஆரம்பித்து ‘ஒருத்தன் சிலை செதுக்கும்போது கீழே துகள் விழ’னு ஒரு கதையை ஆரம்பிக்க, கட்டையப் போட்டார் பிக்கி. விளக்கம் எல்லாம் வேணாம். என்ன பங்களிப்பு செஞ்சீங்கனு சொல்லுங்கனு கேட்டார் பிக்கி.

‘நீங்க வெளியே போகலாம்’ பிக்பாஸே கடுப்பான தருணம் – பிக்பாஸ் 61-ம் நாள்

எக்ஸாம்ல ஏதாச்சும் தெரியாத கேள்வி கேட்டிருந்தால், அந்த கேள்வியில உள்ள வார்த்தையையே சுத்தி சுத்தி எழுதறதுபோல முழுமையான பங்களிப்பு என்பதை வைச்சே ரெண்டு நிமிஷம் சுத்திச் சுத்திப் பேசுனார். ‘தாங்க முடியாத பிக்பாஸ் பஸ்ஸை அடித்துவிட்டு, ‘ஏன் நிஷா, முழுமையான பங்களிப்பு… முழுமையான பங்களிப்பு’னு சொன்னீங்கள்.. அது என்னன்னு கடைசி வரை சொல்லலையேனு தலையில ஒரு குட்டு வெச்சு அனுப்பினார்.

நிஷா வெளியே வந்தபோது, உள்ளே சென்று உதை வாங்கிய ரமேஷ், ஆஜித், ரம்யா கோஷ்டி உட்கார்ந்திருந்தது. ‘என்னா ஆச்சு… ஆப்பரேஷன் சுகம்தானே’னு கேட்டது. நிஷா கண்ணீர் கம்பலையுமாச் சொல்லி முடித்தார். ‘இவனுங்க செக்கிங்க்னு சொன்னது நைட்டி போட்டுட்டு போலாம்னு நினைச்சேன். அப்படி போயிர்நுதேன் அடிச்சி விரட்டிருப்பார்னு சொல்ல எல்லோரும் சிரித்தனர்.

பிக்பாஸ் இந்த சாட்டையை 40 நாட்களிலேயே நீங்க எடுத்திருந்தால் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். சரி, பரவாயில்லை. இனிவரும் 40 நாட்களில் ஏதாச்சும் சுவாரஸ்யமாகச் செய்யறாங்களான்னு பார்ப்போம்.