60 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்; உயிருடன் மீட்க போராட்டம்

 

60 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்; உயிருடன் மீட்க போராட்டம்

ஆழ்துளை கிணற்றில் சிறுவர்கள் தவறி விழும் அவலம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

கடந்த ஆண்டு திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுர்ஜின் ஆழ்துளை கிணற்றில் சிக்கியதால் நடந்த மீட்பு போராட்டங்களை இந்தியாவே உற்று நோக்கியது. அழுகிய நிலையில் சுர்ஜித் மீட்கப்பட்டபோது, ஆழ்துளை கிணற்றில் பலியாகும் கடைசி உயிர் சுர்ஜித்தாகத்தான் இருக்க வேண்டும் என்று அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. ஆனாலும், ஆழ்துளை கிணற்றில் சிறுவர்கள் விழுந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

60 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்; உயிருடன் மீட்க போராட்டம்

வயல்வெளியில் மூடப்படாமல் இருந்த போர்வெல் துளையில்தான் விழுந்து சுர்ஜித் உயிரிழந்தான். அதன் பின்னர் போர்வெல் துளைகளை மூடாமல் விடக்கூடாது என்றும் அரசும் நீதிமன்றமும் உத்தரவிட்டது. அதிகாரிகளும் கவனிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டன.

அதிகாரிகள், பொதுமக்களின் அலட்சியத்தினால், உத்திரபிரதேசத்தில் மெஹாபா மாவட்டம் குல்பஹார் கிராமத்தின் வயலில் 60 அடி ஆழ மூடாத போர்வெல் கிணற்றில் 4 வயது சிறுவன் விழுந்துவிட்டான்.

தீயணப்பு துறையினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் அச்சிறுவனை மீட்க போராடிக் கொண்டிருக்கிறார்கள்.