பிக்பாஸ் இந்த சீசன் ஏன் போரடிக்குது தெரியுமா? – பிக்பாஸ்4

 

பிக்பாஸ் இந்த சீசன் ஏன் போரடிக்குது தெரியுமா? – பிக்பாஸ்4

கொஞ்சம்கூட சுவாரஸ்யமே இல்லாத ஒரு விஷயத்தையும் எப்படி வெகு சுவாரஸ்யமாக எடுத்துச் செல்வது என்பதை பிக்பாஸின் சென்ற சீசன் சாண்டி அண்ட் கோஷ்டியிடம் பார்த்தோம். ஆனால், இந்த சீசனிலோ எவ்வளவு சுவாரஸ்யமான டாஸ்க்கைக் கொடுத்தாலும் அதை சொதப்பி, பார்ப்பவர்களுக்கு எரிச்சல் வரும்படி செய்து, பிக்பாஸின் கண்களில் ரத்த கண்ணீர் வர வைத்து விடுகிறார்கள். உங்களுக்கு என்ன கொடுத்தாலும் இப்படியே செய்தால் நான் எப்படியா கண்டண்ட் எடுக்கிறதுனு பிக்பாஸ் சாட்டையை எடுக்கப்போகும் வெகுதூரத்தில் இல்லை. நேற்றைய எப்பிசோட்டைப் பார்க்கையில் அப்படித்தான் தோன்றியது.

59-ம் நாள் தொடர்ச்சி…

பிக்பாஸ் இந்த சீசன் ஏன் போரடிக்குது தெரியுமா? – பிக்பாஸ்4

கால் சென்டர் டாஸ்க்கில் யார் யாருக்கு எந்த இடம் என்று வரிசைப்படுத்துதல் நேற்றும் தொடர்ந்தது. முதல் இடத்தில் ஷனம், அர்ச்சனா, ஆரி எனப்போட்டிப்போட்டுக்கொண்டு நின்றார்கள்.

ஒவ்வொருவரும் தாங்கள் என்ன பேசினோம்.. என்ன ரிசீவ் பண்ணினோம் என விலாவாரியாகப் பேசினார்கள். இதுதான் இந்த சீசனின் அடிப்படை பிரச்னை. 24 மணி நேரம் நடப்பதை நமக்கு 1 மணி நேரம் காட்டப்படுகிறது. அதிலும், முந்தைய நாளின் கதையை ரிப்பீட் சொல்லும் விதமாகத்தான் கண்டண்ட் இருக்கு. அதனால்தான் இந்த சீசன் இவ்வளவு டல் அடிக்கிறது. ஒரு சீரியல் பார்க்கும் தோற்றத்தைத் தருகிறது. 60 நாளாகியும் சோஷியல் மீடியாவில் வைரலாகும் ஒரு விஷயமும் இல்லை.

வரிசைப்படுத்துதல் அடிப்படையில் நாமினேஷனில் ஏதாவது சலுகை கிடைக்குமோ என்ற எண்ணம் பலருக்கும் இருந்திருக்கும்போல. அதனால், முதல் 5 இடங்களுக்கு அடித்துக்கொண்டிருந்தார்கள். ஷனம் இதில் தீவிரமாக இருந்தார். எந்த ஒரு சின்ன விஷயத்தையும் பெரிதாக்கும் முயற்சியில் இருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. அதற்காக, உன்னிடம் பேசுவதை விட  எனச் சொல்லிவிட்டு, செறுப்பை எடுத்து தலையில் அடித்துக்கொண்ட பாலாவின் செய்கை ரொம்ப ஓவர். கண்டிக்கத்தக்கது.

பிக்பாஸ் இந்த சீசன் ஏன் போரடிக்குது தெரியுமா? – பிக்பாஸ்4

அனிதா 2-ம் இடத்தில் நின்றதும் யாரும் எதுவும் சொல்லவில்லை என்று நினைத்தால் அதிலும் பல சண்டைகள். தொட்டாலே சிணுங்கிவிடுவார்… இதில் கேட்கவா வேண்டும். கோபித்துகொண்டு ஆட்டத்தை விட்டே வெளியே நின்றுக்கொண்டார்.

உங்களை வெச்சி ஒரு கொலைகூட செய்யமுடியாது என்று நினைத்த பிக்கி, பஸ்ஸர் சத்தம் கொடுத்து ஆட்டத்தை முடிச்சார். போய் சாப்பிட்டுட்டு தூங்குங்கனு மனசுக்குள் திட்டியிருப்பார்.

ஷனமிடம் பாலா அப்படி நடந்துகொண்டது பெரிய சண்டையாக மாறும் என நினைக்கையில் பாலா பிறந்த நாள் கேக் வந்தது. அதற்குமுன் அர்ச்சனா பூசிவிட்ட திருநீறை அழித்தார் பாலா.

கேக் குடன் பாலாவின் தங்கை எழுதிய கடிதத்தைப் படித்ததும் அழுதார் பாலா. ‘யாரையாது ஹர்ட் பண்ணியிருந்தால் (!!!) மன்னிசிருங்க.. இனிமேலும் பண்ணுவேன்னு சொல்லி வழக்கமான ஃபார்ம்க்கு திரும்பினார் பாலா. எல்லோரும் கொண்டாட, கேக்கை வெட்டி மறக்காமல் முதல் துண்டை ஷிவானிக்குக் கொடுத்தார். வீடியோவில், பாலாவின் தங்கை, அவரின் நண்பர் பேச குஷியானார்.

பிக்பாஸ் இந்த சீசன் ஏன் போரடிக்குது தெரியுமா? – பிக்பாஸ்4

60-வது நாள்

‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ பாடலை ஒலிக்க விட்டார் பிக்கி தம்பி. ஆட்டம் முடிந்ததும், ரம்யா, பாலா, ரமேஷ் சீரியஸாக நேற்று நடந்ததைப் பேசிட்டு இருந்தார்கள். போதுப்பா… முன்கதை சுருக்கமாகவே எப்பிசோட் போயிட்டு இருக்கு.

இன்னொரு பக்கம் 13 வது இடத்தில் தானாகப் போய் நின்று கொண்ட நிஷாவுக்கு சில புத்திமதிகளைச் சொல்லிட்டு இருந்தார் ரியோ. அங்கேயே உட்கார்ந்திருந்தார் பாலா. போற போக்கைப் பார்த்தால் அர்ச்சனா அண்ட் கோவில் பாலாவும் ஷிவானியும் வந்து சேர்ந்திடுவார்கள் போல. அதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அப்படி நடந்தால், அண்ட் கோவையே பாலா உடைத்துவிடுவார் என்பது மட்டும் நிச்சயம்.

கால் செண்டர் டாஸ்கில் மொத்தம் பத்து பேர் தானாக போனை வைத்ததால் 2000 மதிப்பெண்களை லவுட்டிக்கொண்ட பிக்கி, 600 மதிப்பெண்களை மட்டும் லக்ஸரி பட்ஜெட்க்குக் கொடுத்தார். அதில் ரவாவும், சத்து மாவு பவுடரும் வாங்கிக்கொண்டார்கள்.

பிக்பாஸ் இந்த சீசன் ஏன் போரடிக்குது தெரியுமா? – பிக்பாஸ்4

இதையே மதியம் செய்தியாளர்கள் பேசுவதுபோல ரம்யாவும் அனிதாவும் பேச, அதிலும் தன்னைப் பற்றி பெருமை பேசிக்கொண்டார் அனிதா.

பிறகு ஒரு விளம்பரதார் நிகழ்ச்சி. ஒவ்வொருவருக்கும் விருது கொடுக்கும் நிகழ்ச்சி. எல்லா விருதுகளுமே புகழ்ச்சியானது என்பதால் சண்டை சச்சரவுகள் இல்லை.

கைட்னஸ் விருது அர்ச்சனாவுக்கு, மிகவும் நம்பகமானவர் விருது அனிதா, தங்கமானவர் விருது ஆஜித்க்கு, புன்னகை அரசி விருது ஷிவானிக்கு (இது ரொம்ப ஓவரா தெரியலையா?), அன்புடையவர் விருது சோம்ஸ்க்கும், எல்லா திறனும் உடையவர் ஆரி என பாசிட்டிவான விருதுகள் கொடுக்கப்பட்டன.

பெரியளவில் எந்தச் சண்டையும் இல்லை. கேபிதான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஒவ்வொருவரும் மகிழ்ச்சியின் தூதுவர் எனும் விருதுக்கு ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும். அதற்காக ஒரு சீட்டில் தான் நினைக்கும் ஒருவரை எழுதி ஜாடியில் போட வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

பலரும் கணிக்காத வண்ணம், நிஷா மகிழ்ச்சியின் தூதுவதவர் பட்டம் வென்றார். அவருக்கே இது ஆச்சர்யமாக இருந்தது. பெரிய சர்ப்பரைஸ் இல்லாது நேரடியாக இதைக் கொடுத்தார்கள்.  அதிகம் அலட்டல் இல்லாது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் கேபி. அதுவே சற்று ஆறுதல்.

பிக்பாஸ் இந்த சீசன் ஏன் போரடிக்குது தெரியுமா? – பிக்பாஸ்4

முதலில் சொல்லியிருப்பதுபோல இந்த சீசன் போட்டியாளர்கள் தனித்தனியாக கண்டண்ட் கொடுக்கிறார்கள். ஆனால், ஒரு நிகழ்ச்சியாக சுவாரஸ்யமாகக் கொண்டுச்செல்லும் விதமாக விஷயங்களை அளிப்பதில்லை. இத்தனைக்கும் பலவிதங்களில் திறமையானவர்கள் உள்ளே இருக்கிறார்கள். பாடக்கூடிய ஆஜித், டான்ஸில் கலக்கும் கேபி, பேச்சில் வியக்க வைக்கும் நிஷா, அர்ச்சனா என பலரும் இருக்கிறார்கள். ஆனால், பார்வையாளர்களுக்கு பெரியளவில் சுவாரஸ்யமான நடப்புகள் இல்லை என்பதே உண்மை.