6000 எம்ஏஹச் பேட்டரி, 48 எம்பி கேமராவுடன் அசத்த வருகிறது சாம்சங் கேலக்சி.. விலை தெரியுமா?

 

6000 எம்ஏஹச் பேட்டரி, 48 எம்பி கேமராவுடன் அசத்த வருகிறது சாம்சங் கேலக்சி.. விலை தெரியுமா?

இந்திய தொழில்நுட்ப சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அசத்தலான ஸ்பெசிஃபிகேஷன்களுடன் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

m30s

இந்திய தொழில்நுட்ப சந்தையில் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான சாம்சங் பயனாளர்களை கவர பல சிறப்பம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன்களை இம்மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. 

தற்போது சந்தையில் இருக்கும் விவோ, ஓப்போ, ரெட்மி போன்ற ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் கொடிகட்டிப் பறந்தாலும் இன்றளவும் முதலிடத்தில் இருப்பது சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் தான். குறிப்பாக கேலக்ஸி ரக மாடல்கள் முன்னிலை பெறுகின்றன. 

அந்த கேலக்ஸி ஸ்மார்ட் போன்களில் புதிய சில மாடல்களை சாம்சங் நிறுவனம் அமேசான் போன்ற இயங்குதளங்களில் அறிமுகம் செய்து வருகிற 29ம் தேதி முழு நேர விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எம்30 ரக கேலக்சி ரக மாடலின் அப்டேடட் வடிவமாக எம்30எஸ் என்ற மாடல் வெளிவருகிறது.

விலை விபரம்

m30s

4ஜிபி + 64 ஜிபி வேரியன்ட் – 13,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

6ஜிபி + 128 ஜிபி வேரியன்ட் – 16,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வர இருக்கிறது.

கேலக்சி எம்30எஸ் சிறப்பம்சங்கள்

1. 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

2. எக்சைனோஸ் 9611 10 என்.எம். பிராசஸர்

3. ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 1.5 இயங்குதளம்

4. 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா

5. 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

6. 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி