600 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றிய வினோதம்: சாதனைப் படைத்த மருத்துவர்கள்…

 

600 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றிய வினோதம்: சாதனைப் படைத்த மருத்துவர்கள்…

இது போன்ற நிகழ்வுகள் குரைப் பிரசவத்துடன் பிறக்கும் குழந்தைகளையும் காப்பாற்றி, சாதாரண குழந்தைகள் போல வளர்க்க முடியும் என்பதற்கு ஒரு முன் உதாரணமாக திகழ்கிறது. 

திருப்பூரில் உள்ள தாராபுரத்தில் வசித்து வரும் ராஜ்குமார், பானுப்பிரியா தம்பிதியினருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் ஆகியுள்ளது. திருமணம் ஆகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழைந்தை பிறக்காததால் பானுப்பிரியா ஏக்கமடைந்துள்ளார். அந்த 10 வருடத்தில் 3 முறை கருத்தரித்தும் குழந்தை பிறக்கவில்லை.

Baby

இந்த ஆண்டு 4 ஆவது முறையாக பானுப்பிரியா கருத்தரித்துள்ளார். குழந்தை பிறக்குமா, பிறக்காதா என்ற குழப்பத்திலே அவரும் அவரது குடும்பத்தினரும் இருந்துள்ளனர். வழக்கமாக, கருத்தரிக்கும் பெண்களுக்கு 9 மதங்களிலோ அல்லது அதற்கு சற்று முன், பின்னுமாக குழந்தை பிறக்கும். ஆனால், பானுப்பிரியாவிற்கு 6 மாதத்திலே குழந்தை பிறந்து விட்டது. 10 வருடங்கள் கழித்து, 600 கிராம் எடையுடன் தனியார் மருத்துவமனையில்  பிறந்த அந்த ஆண் குழந்தையை கண்டு மிகவும் அதிருப்தி அடைந்தனர். 

Baby

பொதுவாக, குறைப் பிரசவத்தில் பிறக்கும் பல குழந்தைகளை காப்பாற்ற முடியாது. காப்பாற்ற முடிந்தாலும் கூட அந்த குழந்தை ஊனமாகவே இருக்கும். இதனால், குழந்தைக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று பதறிய ராஜ்குமார்- பானுபிரியா தம்பதியினரை மருத்துவம் பார்த்த மருத்துவர் பூபதி, குரைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் வளர்ந்தவுடன் மற்ற குழந்தைகளை போல ஆரோக்கியமாக இருக்கும், அதனால் பயப்பட வேண்டியதில்லை என்று ஆறுதல் கூறி அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளார்.

Baby

மேலும், வெளிநாடுகளில் மட்டுமே கிடைக்கும் அரியவகை  சிகிச்சைகள் தற்போது ஈரோடு போன்ற இடங்களிலும் கிடைப்பதால் மக்கள் அதை பயன்படுத்தி குரைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்றும் மருத்துவர் கூறியுள்ளார். 

Baby

இது போன்ற நிகழ்வுகள் குரைப் பிரசவத்துடன் பிறக்கும் குழந்தைகளையும் காப்பாற்றி, சாதாரண குழந்தைகள் போல வளர்க்க முடியும் என்பதற்கு ஒரு முன் உதாரணமாக திகழ்கிறது.