பிச்சைகாரர்களை தேடிப்பிடித்து வேலை கொடுக்கும் ராஜஸ்தான் அரசாங்கம்

 

பிச்சைகாரர்களை தேடிப்பிடித்து வேலை கொடுக்கும் ராஜஸ்தான் அரசாங்கம்

ராஜஸ்தானில் பிச்சைகாரர்களுக்கு தொழில் பயிற்சி அல்லது திறன் பயிற்சி வழங்கி, வேலை வழங்கி வரும் திட்டத்தை அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் தற்சமயம் பிச்சைகாரர்களாக இருந்த 60 பேர் பல்வேறு நிறுவங்களில் பணியாளர்களாக மாறியுள்ளனர்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பிச்சைகாரர்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிச்சைக்காரர்களுக்கு ஒரு வருடம் திறன் பயிற்சி வழங்கி அதன் பிறகு வேலை வழங்கும் திட்டத்தை அம்மாநில செயல்படுத்தி வருகிறது.

பிச்சைகாரர்களை தேடிப்பிடித்து வேலை கொடுக்கும் ராஜஸ்தான் அரசாங்கம்
முதல்வர் அசோக் கெலாட்

பிச்சைகாரர்களுக்கு தொழில்பயிற்சி அளித்து வேலை வழங்கும் இந்த திட்டத்தை ராஜஸ்தான் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. ராஜஸ்தான் திறன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் சோபன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் மேனேஜ்மென்ட் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு வருட பயிற்ச திட்டத்தை முடித்த 60 பேர் தற்போது பல்வேறு இடங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

பிச்சைகாரர்களை தேடிப்பிடித்து வேலை கொடுக்கும் ராஜஸ்தான் அரசாங்கம்
திறன் பயிற்சி முடித்து பணியாளர்களாக மாறியவர்கள்

ராஜஸ்தான் திறன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குனர் நீரஜ் கே பவன், மாநிலத்தில் பிச்சை எடுப்பதை ஒழிப்பது மற்றும் அவர்களுக்கு ஒரு கவுரமான வாழ்க்கையை கண்டுபிடிக்க உதவுவது முதல்வர் அசோக் கெலாட்டின் கனவு. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பிச்சைக்காரர்களுக்கு ஒராண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. எங்கள் இலக்கு 100 பிச்சைக்காரர்கள், அவர்களில் 60 பேர் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது அவர்கள் பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தவும்,ஏதாவது சம்பாதிக்க கற்றுக்கொள்ள அவர்களை ஊக்குவிக்கவும் 15 முதல் 20 நாட்களானது என்று தெரிவித்தார்.

பிச்சைகாரர்களை தேடிப்பிடித்து வேலை கொடுக்கும் ராஜஸ்தான் அரசாங்கம்
நீரஜ் கே பவன்

ராஜஸ்தான் அரசின் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்களில் சிலர் ஜெய்ப்பூரில் உள்ள ரெட் பெப்பர்ஸ் உணவகத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த உணவகத்தின் இயக்குனர் ராஜீவ் கம்பானி கூறுகையில், நாங்கள் இங்கு 12 பேருக்கு பயிற்சி அளித்துள்ளோம். ஆரம்பத்தில், கடினமாக இருந்தது. ஆனால் 15-20 நாட்கள் பயிற்சிக்குப் பிறகு அவர்கள் இங்கே குடியேறினர். அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். எதிர்காலத்தில் இது போன்ற பணியாளர்கள் எங்களது உணவகங்களில் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என்று தெரிவித்தார்.