60 வருடமாக புதுச்சேரியில் செல்வாக்கு செலுத்தும் சேலம் பிரியாணி

60 வருடமாக புதுச்சேரியில் செல்வாக்கு செலுத்தும் சேலம் பிரியாணி

பாண்டிச்சேரியில் தொடங்கி  இப்போது தமிழகத்திலும் கேரளத்திலும் இருக்கும் எல்லா பிரபல ஹோட்டல்களும் கிளை திறந்து விட்டன.ஆனாலும்,இன்னும் பழைய செல்வாக்கோடு கெத்தாக நடக்கும் உணவகங்களில் ஒன்று இந்த சேலம் பிரியாணி ஹோட்டல்.

60 வருடங்களாக அதே ரெசிப்பிதான்.புதியதாக ,இன்றைய மூன்றாவது தலைமுறை நிர்வாகிகள் சேர்த்திருக்கிம் ஐட்டங்களை தவிர.புரோட்டா , தோசை எல்லாம் இருந்தாலும் இவர்களின் பிரியாணி, அதுவும் சீரக சம்பாவில் செய்யப்படும் மட்டன் பிரியாணிதான் இந்த ஹோட்டலின் சிக்னேச்சர் டிஷ்!.

salem briyani hotel

food

அதே போல இவர்கள் செய்யும் சிக்கன் லாலிபாப்,சிக்கன் 65 பிரியாணி போன்ற புதிய தலைமுறை டிஷ்களுக்கு குழந்தைகளிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.
சிக்கன் பிரியாணியும் உண்டு.முகப்பை மட்டும் நவீனமாக வைத்திருக்கிறார்கள். உள்ளே சமையல் விரகடுப்பில்தான் நடக்கிறது. தாத்தாக்கள் அறிமுகப் படுத்திய அதே மசாலாக்களை அதே வழியில்தான் இப்போதும் தயாரிக்கிறார்கள்.

salem briyani

உள்ளே பழைமையான வீடு போன்ற அலங்காரம் கொண்ட விசாலமான உணவுக்கூடம்.பழைமையான வீடு போன்ற உள் அலங்காரமும் அமைதியான அழகுடன் இருக்கிறது.இலையில்தான் பிரியாணி பரிமாறுகிறார்கள்.மட்டன் ஃபிரை பிரியாணி,சிக்கன் 65 பிரியாணி  என்று எல்லா காம்போவும் 230 ரூபாய்க்குள்தான் விலை.பிரியாணி சாப்பிட்டு முடித்ததும் வடித்த சோறும் ஒரு தரமான மிளகு ரசமும் தருகிறார்கள். நீங்கள் கடாய் ஃபிரையோ,இவர்களின் இன்னொரு சிறப்பு ஐட்டமான மட்டன் லிவர் ஃபிரையோ தொடு கறியோ வாங்கி இருந்தால் ,அதில் மிச்சம் இருக்கும் சாந்துடன் ரசத்தையும் சேர்த்து பிசைந்து அடித்தால் ரம்மியமாக இருக்கும்.

briyani

பகல் 12 மணியில் இருந்து பிரியாணி பரிமாறத் துவங்குகிறார்கள்,அது மாலை 4 மணிவரைத் தொடர்கிறது. அடுத்த ரவுண்டு மாலை 7 மணிக்குத் துவங்கி இரவு 9 மணிவரை நடக்கிறது.இரவில் பிரியாணியோடு புரோட்டாவும் தோசையும் தருகிறார்கள். அந்த மெத்து மெத்து தோசைக்கு திக் கிரேவியோடு வரும் மட்டன் ரகங்கள் பரபரப்பாக விற்பனையாகிறது.பாண்டிச்சேரி இரவுகள் பற்றி உங்களுக்கு தெரியாதா.