சர்க்கரை நோயின் 6 அறிகுறிகள்!

 

சர்க்கரை நோயின் 6 அறிகுறிகள்!

சர்க்கரை நோயின் 6 அறிகுறிகள்!

சர்க்கரை நோய், முக்கியமான அறிகுறி அதிக தாகம், திடீர் உடல் எடை குறைவு, வாய் உலர்தல், அதிகப் பசி, புண்கள் ஆறுவதில் தாமதம், Diabetes, the main symptom of which is excessive thirst, sudden weight loss, dry mouth, excessive appetite, delayed healing of ulcers

6 Symptoms of Diabetes!

Type 2 diabetes is the root cause of all the problems that can occur in the body due to aging
வயோதிகம் காரணமாக உடலில் ஏற்படக்கூடிய எல்லா பிரச்னைகளுக்கும் மூலக் காரணமாக டைப் 2 சர்க்கரை நோய் உள்ளது. தற்போது கொரோனா பரவலில் கூட சர்க்கரை நோயாளிகளே டார்க்கெட் மக்களாக உள்ளனர். இந்தியாவில் சர்ச்கரை நோயாளிகளில் 80 சதவிகிதம் பேருக்கு தவறான வாழ்க்கை முறை காரணமாகவே சர்க்கரை நோய் வருகிறது. அதிலும் அறிகுறிகள் தெரிந்து சிகிச்சைக்கு வந்தவர்கள் எண்ணிக்கை பாதிதான். தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியாமலேயே இன்னும் லட்சக் கணக்கானவர்கள் வாழ்ந்து வருகின்றனர். சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறிகள் என்ன என்று பார்ப்போம்.
அதிக தாகம்

சர்க்கரை நோயின் 6 அறிகுறிகள்!
சர்க்கரை நோயின் முக்கியமான அறிகுறி அதிக தாகம். வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் தண்ணீர் குடிக்கிறோம் என்றால் கொஞ்சம் கவனிக்க வேண்டும். ஏனெனில், அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, அதை வெளியேற்ற சிறுநீரகங்கள் வேலை செய்கின்றன. உடலில் உள்ள தண்ணீரை அது வெற்றியேற்றி விடுகிறது. அதை சரி செய்ய தாகம் ஏற்படுகிறது.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சர்க்கரை நோயின் 6 அறிகுறிகள்!
உடலில் உள்ள சர்க்கரையை வெளியேற்றும் முயற்சியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால்தான் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக, அதிக முறை சிறுநீர் கழிக்கச் சென்றால், தூக்கத்தின் நடுவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
உடல் எடை குறைதல்
இன்சுலின் போதுமான அளவில் சுரக்காத நிலையில் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. உடல் சர்க்கரையை சரியாக பயன்படுத்த முடியாத நிலை காரணமாக உடல் எடை குறையும்.  எனவே, திடீர் உடல் எடை குறைவு ஏற்பட்டால் மகிழ வேண்டாம், மருத்துவரைப் பாருங்கள்.

சர்க்கரை நோயின் 6 அறிகுறிகள்!
அதிகப் பசி
உடலில் சர்ச்சரை அளவு அதிகமாக இருக்கிறது, ஆனால் அதை நம்முடைய உடல் பயன்படுத்த முடியவில்லை. விளைவு பசி எடுக்கிறது.
வாய் உலர்தல்
சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சில் சுரப்பு குறைவதால் வாய் உலர்தல் பிரச்னை ஏற்படும். சில மருந்துகள் எடுப்பதன் காரணமாகவும் வாய் உலர்தல் பிரச்னை ஏற்படலாம். வாய் உலர்தல் பிரச்னை தொடர்ந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

சர்க்கரை நோயின் 6 அறிகுறிகள்!
அதிகப்படியான சோர்வு
உடல் இயங்க ஆற்றல் தேவை. அதை தருவது சர்க்கரை எனப்படும் குளுக்கோஸ். சர்க்கரை நோயாளிகளின் உடல் திசுக்களைப் பொருத்தவரை தழைவாலை இலையில் உணவு உள்ளது, ஆனால் சாப்பிடத்தான் முடியவில்லை என்ற நிலை. ஆற்றல் கிடைக்காததால் உடலில் சோர்வும் தளர்ச்சியும் ஏற்படும். உடலில் நீர்ச்சத்து குறைவதால், தலைவலியும் ஏற்படுகிறது.

சர்க்கரை நோயின் 6 அறிகுறிகள்!
இது தவிர பார்வை மங்குதல், சருமத்தில் மாறுபாடு, புண்கள் ஆறுவதில் தாமதம் என்று வேறு சில அறிகுறிகளும் உள்ளன. ஆனால் அதை உணர்ந்து கொள்வது மிகவும் அரிது. எனவே, இந்த அறிகுறிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவை தென்பட்டால் தாமதிக்க வேண்டாம், மருத்துவரை நாடுங்கள். எனக்கு எல்லாம் எந்த நோயும் வராது என்று அசட்டையாக இருந்துவிட வேண்டாம். ஆரம்பநிலையிலிருந்தால் வெறும் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மாத்திரை – மருந்து மூலம் சர்ச்சரை நோய் பாதிப்பை தடுக்கலாம்.