கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்!

 

கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்!

கர்நாடக மாநிலத்தில் கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மீண்டும் அதிகளவில் புழக்கத்துக்கு வந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லட்ச கணக்கில் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து தான் தமிழகத்துக்கு குட்கா சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்!

கர்நாடக மாநிலம் குஸ்பர்கா என்னும் இடத்தில் கோழிப்பண்ணை இருக்கிறது. அந்த பண்ணையில் குட்கா பறிமுதல் செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதி போலீசார் திடீர் சோதனையில் நடத்திய போது பண்ணையில் ரகசிய பதுங்கு குழி அமைத்து வைக்கப்பட்டிருந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

1.35 டன் எடை கொண்ட குட்காவின் சந்தை மதிப்பு ரூ.6 கோடி இருக்கும் என தெரிவித்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து பண்ணை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.