`மும்பை டூ கொல்கத்தா; தங்கக் கடத்தலில் சிக்கிய திருச்சி ஏஜெண்டுகள்!’- என்ஐஏ கிடுக்கிபிடி விசாரணையில் தகவல்

 

`மும்பை டூ கொல்கத்தா; தங்கக் கடத்தலில் சிக்கிய திருச்சி ஏஜெண்டுகள்!’- என்ஐஏ கிடுக்கிபிடி விசாரணையில் தகவல்

கேரளாவில் தங்க கடத்தலில் தொடர்புடைய ஏஜெண்டுகள் 6 பேர் திருச்சியில் என்ஏஐ அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். ரகசிய இடத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் மாறி மாறி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.சிவசங்கரிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவர் கூறிய பதிலில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரை தொடர்ந்து என்.ஐ.ஏ அமைப்பு கவனித்து வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷின் நடவடிக்கைகளை கண்காணிக்க, கடந்த இரண்டு ஆண்டுகளில் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு செயலகத்தில் என்ன நடந்தது என்பதை ஆராய, அங்கிருக்கும் சி.சி.டி.வி காட்சிகளை என்.ஐ.ஏ கோரியுள்ளது. இந்த காலகட்டத்தில் அவர் பல முறை சிவசங்கரை அழைத்து பேசி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

`மும்பை டூ கொல்கத்தா; தங்கக் கடத்தலில் சிக்கிய திருச்சி ஏஜெண்டுகள்!’- என்ஐஏ கிடுக்கிபிடி விசாரணையில் தகவல்

திருவனந்தபுரதிதில் நடைபெற்ற விசாரணையின் போது, சிவசங்கர், ஸ்வப்னா, சுரேஷ் மற்றும் பி.எஸ். சரித்குமார் ஆகியோரை தெரியும் என்றும் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் எங்கள் குடும்ப உறவு தான் தவிர அதற்கு மேல் எந்த பழக்கமும் இல்லை. அதேநேரத்தில் தங்கக் கடத்தலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கில், ஸ்வப்னா, சரித், சந்தீப், ரமேஷ் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் களமிறங்கிய சுங்கத்துறையினர், ரமேஷிடம் நடத்திய விசாரணையில், கடத்தல் தங்கம் பெரும்பாலும் தமிழ்நாட்டில் திருச்சி மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ஏஜெண்டுகள் மூலமாக விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார் 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்ததை அறிந்த உடன் தன்னிடம் இருந்த அனைத்து கடத்தல் தங்கத்தையும் திருச்சிக்கு கொண்டு வந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, திருச்சியில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள சுங்கத்துறையினர், ஸ்வப்னாவை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி பெற்று உள்ளனர்.

`மும்பை டூ கொல்கத்தா; தங்கக் கடத்தலில் சிக்கிய திருச்சி ஏஜெண்டுகள்!’- என்ஐஏ கிடுக்கிபிடி விசாரணையில் தகவல்

இது ஒருபுறமிருக்க இந்த கடத்தல் விவகாரத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். கேரளாவில் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள், பல மாநிலங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ரமேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் என்ஏஐ அதிகாரிகள் திருச்சியில் ரகசியமாக முகாமிட்டுள்ளனர். ஜாபர் கார், அந்த கொண்டான் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆறு பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் 6 பேரும் ஏஜெண்டுகளாக செயல்பட்டு மும்பை, கொல்கத்தா ஆகிய பகுதிகளுக்கு தங்கத்தை கடத்தி சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.