தமிழகத்தில் 6.10 கோடி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழகத்தில் 6.10 கோடி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 6.10 கோடி மக்கள் வாக்களிக்கவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 6.10 கோடி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. முதற்கட்டமாக தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.

தமிழகத்தில் 6.10 கோடி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இந்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு வெளியிட்டார். தமிழகத்தில் மொத்தமாக 6,10,44,358 வாக்காளர்கள் இருப்பதாகவும் 3.03 கோடி பெண் வாக்காளர்கள், 3.01 கோடி ஆண் வாக்காளர்கள், 3ம் பாலினத்தவர்கள் 6,385 பேர் இருப்பதாகவும் அறிவித்துள்ளார். மேலும் அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.05 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும் குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.73 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.