6 வயது குழந்தையை பிரிந்து, திருநம்பியுடன் குடும்பம் நடத்தும் பெண்! அதிர்ச்சியில் உறவினர்கள்!

 

6 வயது குழந்தையை பிரிந்து, திருநம்பியுடன் குடும்பம் நடத்தும் பெண்! அதிர்ச்சியில் உறவினர்கள்!

மதுரை ஆனையூரைச் சேர்ந்தவர் சுகன்யா. மதுரை பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் 2007 ல் இவருடன் பள்ளியில் படித்த எப்ஸியாவும் சுகன்யாவும் தோழிகள்.  10 ஆம் வகுப்பு வரை படித்த இவர்கள், எப்போதும் ஒன்றாகவே இருந்துள்ளனர். எப்ஸியா பெண்ணாக இருந்த போதிலும் நாளடைவில் ஏற்பட்ட பாலின மாறுபாட்டால் அவர் ஆணாக மாற தொடங்கியதால் இருவரின் நெருக்கத்தை அறிந்த சுகன்யாவின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

6 வயது குழந்தையை பிரிந்து, திருநம்பியுடன் குடும்பம் நடத்தும் பெண்! அதிர்ச்சியில் உறவினர்கள்!

மதுரை ஆனையூரைச் சேர்ந்தவர் சுகன்யா. மதுரை பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் 2007 ல் இவருடன் பள்ளியில் படித்த எப்ஸியாவும் சுகன்யாவும் தோழிகள்.  10 ஆம் வகுப்பு வரை படித்த இவர்கள், எப்போதும் ஒன்றாகவே இருந்துள்ளனர். எப்ஸியா பெண்ணாக இருந்த போதிலும் நாளடைவில் ஏற்பட்ட பாலின மாறுபாட்டால் அவர் ஆணாக மாற தொடங்கியதால் இருவரின் நெருக்கத்தை அறிந்த சுகன்யாவின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2012ல் ராமநாதபுரம் கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு சுகன்யாவை திருமணம் செய்து வைத்தனர். ராஜேஷுடன் 7 ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்த நிலையில், இவர்களுக்கு ஆறு வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் ராஜேஷால், எழுந்து நடக்க இயலாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்ற சுகன்யா, தனது பள்ளித்தோழி எப்ஸியாவை சந்தித்துள்ளார்.

நீண்டநாள் பழகிய இருவரும் மீண்டும் சந்தித்து, தங்களது செல்போன் எண்களைப் பரிமாறிக்  கொண்டு தங்களது நட்பை புதுப்பித்தனர். அப்போது சுகன்யா தனது கணவரின் உடல்நிலைப் பற்றி சொல்லி அழுதுள்ளார். இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட எப்ஸியா, கவலைப்படாதே நீ என்னோடு வந்து விடு. நாம் சேர்ந்து புதிய வாழ்க்கையை தொடரலாம் என்று ஆறுதல் கூறியுள்ளார்.

சுகன்யாவிற்காக, தனது பெயரை ஜெய்ஸன் ஜோஸ்வா என்று மாற்றிக் கொண்ட எப்ஸியா, அறுவை சிகிச்சைகள் மூலம் தன்னை திருநம்பியாகவும் மாற்றிக் கொண்டு, வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வசிக்க ஆரம்பித்தார்கள். மதுரையலுள்ள ஒரு தனியார் மாலில் சுகன்யா வரவேற்பாளராகவும், திருநம்பியான ஜோஷ்வா காவலாளியாகவும் பணிசெய்து வந்துள்ளனர்.

தன்னுடைய 6 வயது குழந்தையை தம்பி வீட்டில் தவிக்க விட்டு, திருநம்பியுடன் குடித்தனம் நடத்தி வரும் சுகன்யாவை மீட்க அவரது குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து சுகன்யா, தனது 6 வயது மகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன் புகார் அளித்தார்.

இந்த புகார் தொடர்பாக இன்று விசாரணைக்காக காவல்நிலையம் வந்த சுகன்யாவிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடும் ஏற்படவில்லை. முறையற்ற வாழ்க்கை வாழும் பெண்ணிடம் தங்கள் குழந்தையை ஒப்படைக்க மறுத்து விட்டனர். இதனால் நீதிமன்றம் மூலம் தீர்வு பெற்று கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.