6% முஸ்லீம் ஓட்ட வெச்சுட்டு நாக்க வழிக்கவா..?! : அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தரங்கெட்ட பேச்சுக்கு இஸ்லாமியர்கள் கண்டனம்..!

 

6% முஸ்லீம் ஓட்ட வெச்சுட்டு நாக்க வழிக்கவா..?! :  அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தரங்கெட்ட பேச்சுக்கு இஸ்லாமியர்கள் கண்டனம்..!

நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் நியாய விலைக் கடை குறித்த மனுவை அவரிடம் அளித்துள்ளனர்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாங்குநேரியில் அதிமுக வேட்பாளருக்காக வாக்கு சேகரிக்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் நியாய விலைக் கடை குறித்த மனுவை அவரிடம் அளித்துள்ளனர். அதனை வாங்க மறுத்த ராஜேந்திர பாலாஜி, ‘முஸ்லீம்கள் தான் அதிமுகவுக்கு ஓட்டுப் போட மாட்டீங்களே. அப்புறம் எதுக்கு இந்த மனுவை என்கிட்ட கொடுக்கிறீங்க..முஸ்லீம்களின் 6% ஓட்ட வெச்சுட்டு நாக்க வழிக்கவா முடியும்’ என்று தகாத வார்த்தையில் பேசியுள்ளார். 

Rajendra balaji

ராஜேந்திர பாலாஜியின் இந்த தரங்கெட்ட பேச்சைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இதுவரை நடைபெற்ற எந்த தேர்தலிலும் இஸ்லாமியர்களின் உதவியின்றி அதிமுக வெற்றி பெற்றது போன்று அமைச்சர் பேசுகிறார். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும் பா.ஜ.க வை எதிர்த்து அதிமுக நின்றதால், இஸ்லாமியர்கள்  அனைவரும் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தோம். அதையெல்லாம் அமைச்சர் மறந்து விட்டாரா.. என்றைக்கு அதிமுக பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்ததோ அன்றைக்கே முஸ்லீம்கள் அதிமுகவுக்கு ஓட்டுப் போடக் கூடாது என்று முடிவு செய்து விட்டோம்.

 

Rajendra balaji

முஸ்லீம்களின் ஆதரவைத் திரும்பப் பெற அதிமுக கட்சியினர் எண்ணிக் கொண்டிருக்கும் போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இத்தகைய தகாத பேச்சு அதிமுகவைச் சவக்குழிக்கு அனுப்பிவிடும் போல் தெரிகிறது. சிறுபான்மையினர்கள் ஓட்டு எங்களுக்கு வேண்டாம் என கூறி அமைச்சரவையில் அமர்ந்திருக்கும் அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி, தன்னை வட நாட்டு பா.ஜ.க தலைவர் போல நினைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார். இவரின் வன்மையான இந்த செயலை அதிமுக தலைமைக் கண்டிக்க வேண்டும் ‘ என்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிக்கை மூலமாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.