6 மணி நேரத்தில் ரூ.210 கோடிக்கு மது விற்பனை.. ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக்கில் கொட்டிய பணமழை!

 

6 மணி நேரத்தில் ரூ.210 கோடிக்கு மது விற்பனை.. ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக்கில் கொட்டிய பணமழை!

கொரோனா வைரஸ் தடுப்பு பணி முடுக்கி விடப்பட்ட உடன், அனைத்து பார்களும் மூடப்பட்டன.

கொரோனா வைரஸ் தடுப்பு பணி முடுக்கி விடப்பட்ட உடன், அனைத்து பார்களும் மூடப்பட்டன. ஆனால் அப்போது டாஸ்மாக் மூடப்படவில்லை. செவ்வாய் கிழமை ஊரடங்கு உத்தரவு ஆரம்பமாவதற்கு முன்னர் அனைத்து 5,300 கடைகளும் டாஸ்மாக் கடைகளும் திறந்திருந்தன. அந்த கடைசி 6 மணி நேரத்தில் மட்டுமே சுமார் ரூ.210 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. அதே போல ஊரடங்குக்கு ஒரு நாள் முன்னர் தமிழகம் முழுவதிலும் ரூ.220 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அந்த மதுவிற்பனையில் 62% மது வகைகளு 38% பீர் வகைகளும் விற்கபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதால் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், மதுபானத்தை விற்பனை செய்த பணத்தை டெபாசிட் செய்ய முடியாமல் திணறி வருகின்றார்களாம். செவ்வாய் கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், புதன் கிழமை பொது விடுமுறை என்பதால் வியாழக்கிழமை பணத்தை டெபாசிட் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ttn

ஆனால், சென்னையில் இருப்பவர்கள் மட்டுமே வங்கிகளை அணுக முடிந்ததாகவும் தூரத்தில் இருப்பவர்களால் வங்கியை அணுக முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடு டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் ஐ.ஐ.டி.யு.சியுடன் இணைந்து, இதற்கு ஒரு தீர்வு காணுமாறு மாநில செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.