6 நாட்களாகக் குறைந்து கொண்டே வரும் தங்க விலை !

 

6 நாட்களாகக் குறைந்து கொண்டே வரும் தங்க விலை !

ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது.

கடந்த மாதம் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின்னர், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின், கடந்த 4 ஆம் தேதி முதல்  குறைந்து கொண்டே வந்த தங்க விலை நேற்று மாலை ரூ.40 உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து இன்று தங்க விலை குறைந்துள்ளது.  

ttn

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,594க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.28,752க்கு விற்கப்படுகிறது. ஆறு நாட்களாகத் தங்க விலை ரூ.432 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 46.40க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.200 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.46,400க்கு விற்கப்படுகிறது.