6 ஆண்டுகளுக்கு பிறகு விக்கிலீக்ஸ் நிறுவனர் அதிரடி கைது!

 

6 ஆண்டுகளுக்கு பிறகு விக்கிலீக்ஸ் நிறுவனர் அதிரடி கைது!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில்  கைது செய்யப்பட்டுள்ளார். 

லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில்  கைது செய்யப்பட்டுள்ளார். 

ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம்

Julian Assange

 

‘விக்கிலீக்ஸ்’ இணைய தளத்தில்  அமெரிக்கா தொடர்பான பலதரப்பட்ட விவகாரங்கள் அடங்கிய ரகசியங்களை வெளியிட்டதால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதற்காக, கடந்த 2012-ம் ஆண்டு அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவிலிருந்து அங்கிருந்து வெளியேறி, லண்டனில் நைட்ஸ்பிரிட்ஷ் பகுதியில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். 

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கைது
 

இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலியன் அசாஞ்சேவுக்கு அளித்து வந்த ஆதரவை ஈக்வேடார் அரசு திரும்பப் பெற்றதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதையடுத்து அவர் வென்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். தற்போது அவர் காவல்துறை பாதுகாப்பில் உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தூதரகத்தின் முன்   போராட்டம்

Julian Assange

முன்னதாக கடந்த வாரம் ஈகுவேடார் தூதரகத்தின் முன்  பத்திரிகையாளர் ஜான் பில்கர் அசாஞ்சேவை பாதுகாக்கும்படி போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க:  பிரசாரத்தில் சில்மிஷம்: ஓங்கி பளார் விட்ட நடிகை குஷ்பு; வைரல் வீடியோ!