6ம் தேதி வரைக்கும் கடன் வாங்கிக்கலாம்… அரசு வங்கிகள் அதிரடி!

 

6ம் தேதி வரைக்கும் கடன் வாங்கிக்கலாம்… அரசு வங்கிகள் அதிரடி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கெனவே பண்டிகைக் காலங்களில் வங்கிகளில் உடனடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அறிவித்திருந்தார்.

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் விடுமுறையில் இருக்கின்றன. அடுத்து வரிசையாக இந்த மாதம் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி  போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 250 மாவட்டங்களில், வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி உள்பட அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் முடிவு செய்துள்ளன. 

State bank of india

இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கெனவே பண்டிகைக் காலங்களில் வங்கிகளில் உடனடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அறிவித்திருந்தார். இதில் சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான கடன் கல்விக்கடன், தனிநபர் கடன் ஆகியவை உடனடியாக வழங்கப்படுகின்றன.

Punjab national bank

தற்போது நான்கு நாட்களுக்கு விஜயதசமி, சரஸ்வதி பூஜையையொட்டி 4 நாட்களுக்கு கடன் வழங்கப்படும் என்றும், இரண்டாவது கட்டமாக தீபாவளி பண்டிகைக்கும் முன்பாக 150 மாவட்டங்களில் வருகிற 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.