6ஜிபி ரேம், 25 எம்.பி செல்பி கேமரா கொண்ட விவோ வி11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

6ஜிபி ரேம், 25 எம்.பி செல்பி கேமரா கொண்ட விவோ வி11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் 6ஜிபி ரேம், 25 எம்.பி செல்பி கேமரா கொண்ட விவோ வி11 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை: இந்தியாவில் 6ஜிபி ரேம், 25 எம்.பி செல்பி கேமரா கொண்ட விவோ வி11 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் விவோ நிறுவனத்தின் வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது விவோ வி11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கிய சிறப்பம்சங்களாக 6ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 25 எம்.பி செல்ஃபி கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

விவோ வி11 சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 எல்.சி.டி. டிஸ்ப்ளே

ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர்

மாலி-G72 MP3 GPU

– 6 ஜிபி ரேம்

– 64 ஜிபி மெமரி

மெமரியை நீட்டிக்கும் வசதி

டூயல் சிம்

ஃபன்டச் ஓ.எஸ். 4.5 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ

– 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0

– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4

– 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 3315 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்துவோருக்கு ரூ.2000 வரை கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்டேரி நைட் பிளாக் மற்றும் நெபுளா பர்ப்பிள் ஆகிய நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.