5 வருடம் சினிமாவில் நடிக்க மாட்டேன்; திமுகவில் வாக்குறுதி அளித்த நடிகருக்கு என்ன ஆனது?

5 வருடம் சினிமாவில் நடிக்க மாட்டேன்;  திமுகவில் வாக்குறுதி அளித்த நடிகருக்கு என்ன ஆனது?

2016 சட்டமன்ற தேர்தலில் விருப்பமனு கொடுத்து காத்திருந்ததுபோலவே 2021 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவில் விருப்பமனு அளித்திருக்கிறார் நடிகர் போஸ் வெங்கட்.

5 வருடம் சினிமாவில் நடிக்க மாட்டேன்;  திமுகவில் வாக்குறுதி அளித்த நடிகருக்கு என்ன ஆனது?

அறந்தாங்கி தொகுதியில் எனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் நான் வெற்றி பெற்று விடுவேன். நான் எம்.எல்.ஏவாக இருக்கும் 5 ஆண்டுகளும் சினிமாவில் நடிக்க மாட்டேன். இன்னும் ஏன், சென்னைக்கே கூட வரமாட்டேன். தொகுதியிலேயே இருந்து வேலைகளை கவனிப்பேன் என்று உறுதி அளித்திருக்கிறார் நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட்.

தொலைக்காட்சி தொடர்களிலும் சினிமாவிலும் நடித்து வந்த போஸ் வெங்கட், ‘கன்னிமாடம்’ என்ற படத்தை இயக்கி புகழ்பெற்றார். தீவிர திமுக விசுவாசியான இவர் சட்டமன்ற தேர்தலில் தான் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்.

5 வருடம் சினிமாவில் நடிக்க மாட்டேன்;  திமுகவில் வாக்குறுதி அளித்த நடிகருக்கு என்ன ஆனது?

அதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குத்தான் , மேற்கண்ட உறுதியை அளித்திருக்கிறார்.

அவர் மேலும், ‘’கூட்டணி கட்சிகளின் காணத்தால் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி இத்தனை முறையும் திமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை. இந்த முறை திமுக கூட்டணிக்கு ஒதுக்கப்படும் என்று நம்பிக்கை இருக்கிறது. அதனால், எனக்கு சீட் கிடைக்கும் என்றும் நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

5 வருடம் சினிமாவில் நடிக்க மாட்டேன்;  திமுகவில் வாக்குறுதி அளித்த நடிகருக்கு என்ன ஆனது?

இன்று திமுகவில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கி இருக்கிறது. போஸ்வெங்கட்டின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள். 2016ல் விருப்பமனு தாக்கல் செய்தபோது கருணாநிதி நிச்சயம் தனக்கு வாய்ப்பளிப்பார் என்றூ நம்பினார். ஆனால் அன்று நடைபெறவில்லை. இப்போது , ஸ்டாலின் எப்படியாவது வாய்ப்பளிப்பார் என்றே நம்புகிறார்.