பிக்பாஸ் -5 : கமலின் சம்பளம் இத்தனை கோடியா?

 

பிக்பாஸ் -5 : கமலின் சம்பளம் இத்தனை கோடியா?

விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் பிரபலமானது பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் கடந்த நான்கு சீசன்களையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். ஐந்தாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்க இருப்பதாக செய்திகள் பரவுகின்றன.

பிக்பாஸ் -5 : கமலின் சம்பளம் இத்தனை கோடியா?

முதல் சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதுமே அடுத்து இரண்டாவது சீசனை நடிகர் சூர்யா தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளிவந்தன. ஆனால், அந்த சீசனை கமல்ஹாசனே தொகுதுத்து வழங்கினார்.

மூன்றாவது சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவதாக பேச்சு இருந்தது ஆனால் அந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். 4வது சீசனுக்கும் இதே நிலைமைதான்.

4வது சீசனுக்கு பின்னர் கமலஹாசன் தீவிர அரசியலில் இறங்கியதால் அவர் 5வது சீசனை தொகுத்து வழங்கமாட்டார் என்று பேச்சுக்கள் எழுந்தன. நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பெரும் தோல்வியை சந்தித்திருப்பதாலும், கமல்ஹாசனே தோல்வியுற்றிருப்பதாலும் அவரே 5வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார் என்று தகவல்.

பிக்பாஸ் -5 : கமலின் சம்பளம் இத்தனை கோடியா?

ஒருவேளை அவர் கோவை தெற்கு தொகுதியில் ஜெயித்திருந்தால், எல்லோரும் சொல்லியது போல் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்ப வராமல் இருந்திருக்கலாம். கோவை தெற்கில் தோல்வி அடைந்துவிட்டதால், இப்போது அவர் எந்த நெருக்கடிக்கு ஆளாகாமல் இருப்பதால் அவரே ஐந்தாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்க இருக்கிறார் என்றும், இதற்க 50 கோடிக்கும் மேல் சம்பளம் பேசி அதில் பாதியை அட்வான்ஸாக வாங்கி தேர்தலில் செலவிட்டிருக்கிறார் என்றும் தகவல் பரவுகிறது.

கொரோனா ஊரடங்கினால் கடந்த 4வது சீசனும் தாமதமாகவே தொடங்கியது. அதுபோலவே 5வது சீசனும் தொடங்க தாமதம் ஆகும் என்று தெரிகிறது.