தமிழகத்தில் புதிய பாதிப்பு 5,783: 88 பேர் உயிரிழப்பு!

 

தமிழகத்தில் புதிய பாதிப்பு 5,783: 88 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் புதிதாக 5,783 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் புதிதாக 955பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்தவர்களின் இன்று 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் புதிய பாதிப்பு 5,783: 88 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் புதிய பாதிப்பு 5,783: 88 பேர் உயிரிழப்பு!

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இதுவரை மொத்த பாதிப்பு 4,63,480 என்றும்,  மொத்த இறப்பு 7,836  என்றும், இன்றைக்கு குணமடைந்தோர் 5,820 பேர் என்றும், இதுவரை  4,04,186 பேர் என்றும், தெரியவந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில்  கொரோனா பாதிக்கப்பட்டார்கள் இன்றைக்கு ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் பரிசோதனைகளின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டிவிட்டது. 

சென்னை தவிர்த்து 22 மாவட்டங்களில் 4,098 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 538 பேர் இன்றைக்கு கொரோனாவினால் பாதிகப்பட்டுள்ளனர். 

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 17 பேர் கொரோனாவினால் உயிரிழந்தனர். 

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு 41,13,812 ஆக உயர்ந்துள்ளது. 1,065 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70,626 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,07,223-ல் இருந்து 31,80,865 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.82 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 8,82,988 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 27,043,237 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 19,146,517 பேர் குணமடைந்துள்ளனர்.