57 நாடுகளின் இஸ்லாமிய கூட்டமைப்பு இந்தியாவுக்கு கண்டிப்பு.

 

57 நாடுகளின் இஸ்லாமிய கூட்டமைப்பு இந்தியாவுக்கு கண்டிப்பு.

கடந்த வாரம் மலேசியாவில் நடந்த அரபிக் நாடுகள் உச்சி மாநாட்டில்,நீங்கள் கொண்டு வருவது போன்ற சட்டத்தை நாங்களும் கொண்டு வந்தால் என்ன ஆகும் என்று பேசி இருந்தார்.அதற்காக அந்த நாட்டின் தூதரை அழைத்துக் கண்டனம் தெரிவித்தது இந்தியா.

oic

இப்போது ஆர்கனைசேஷன் ஃபார் இஸ்லாமிக் கோப்ரேஷன் என்கிற இஸ்லாமிய கூட்டரசு, இந்தியா சிறுபான்மையினர் நலத்தை கருத்தில் கொள்ளாமல் நடப்பதாகக் கண்டித்திருக்கிறது. ஒ.ஐ.சி என்று அழைக்கப்படும் இந்த அமைப்பில் 57 நாடுகள் உறுப்பினராக உள்ளன.கடந்த மார்ச் மாதம் இந்த அமைப்பு நடத்திய கூட்டத்திற்கு அப்போதைய வெளிவிவகார துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை விருந்தினராக அழைத்து இருந்தது இந்த அமைப்பு.

sushma

ஆனால் ராம் லீலா மைதானத்தில் இஸ்லாமிய அமைப்புகளுடன் தனது அரசுக்கு நல்லுறவு இருப்பதாக மோடி முழங்கிய மூன்று மணி நேரத்தில் இந்தியாவில் இஸ்லாமியருக்குப் பாதுகாப்பு இல்லை என்று கவலை தெரிவித்திருக்கிறது இந்த அமைப்பு.மூன்று இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் ஆறு சிறுபான்மை இன மக்களுக்கு காட்டப்படும் அக்கரை இஸ்லாமியரிடம் இல்லாதது ஏன் என்று கேட்டுள்ள ஓ.ஐ.சி, இந்தியாவில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்புத் தரவேண்டும் என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறது.

ioc

 1969-ல் துவங்கிய ஓ.ஐ.சியின் 42 வது அமர்வில் இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் குறித்து கூர்ந்து கவனித்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.